×

பள்ளிப்பட்டில் ஜாத்திரை திருவிழா கோலாகலம்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு கங்கையம்மன் ஜாத்திரை திருவிழாவில், மகிஷாசுரமர்த்தினி அம்மன் அலங்காரத்தில் கிராம தேவதை கொல்லாபுரி அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பள்ளிப்பட்டில் கங்கையம்மன் ஜாத்திரை திருவிழா 2 நாட்களாக வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.  ஜாத்திரை திருவிழாயொட்டி  கோயில் மற்றும் பிரதான சாலைகள் வண்ண விளக்கங்களால் அலங்கரிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு கொல்லாபுரி அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்யப்பட்டு மேள தாளங்கள் வாணவேடிக்கையுடன் அம்மன்  கிராம வீதிகளில் திருவீதி உலா நடைபெற்றது. இரவு பொதுமக்கள் மத்தியில் கங்கையம்மன் வீதி உலா நடைபெற்றது. பெண்கள் தேங்காய் உடைத்து ஆரத்தி எடுத்தும் வழிபட்டனர். நேற்று காலை காந்தி சிலை அருகில் கங்கையம்மன் எழுந்தருளினார். பெண்கள் காலை முதல் மாலை வரை கும்பம் கொட்டி புடவை செலுத்தியும் தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் ஏராளமான இளைஞர்கள் காளி, அகோரி, நறிக்குறவர் உட்பட பல்வேறு வேடமிட்டு கொண்டாடி மகிழ்ந்தனர். மாலை அம்மனை  ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலையில் கரைத்தனர். ஜாத்திரை திருவிழாவில் பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் சி.ஜெ.சீனிவாசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பி.ரவீந்திரநாத், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ராஜேஸ்வரி ரவிந்திரநாத், பேரூர் செயலாளர் ஜோதிகுமார், பேரூராட்சி தலைவர் மணிமேகலை, பேரூராட்சி முன்னாள் தலைவர் சித்ரா சிவக்குமார், பேரூர் கவுன்சிலர்கள் செந்தில்குமார், விஜயலு, சுவப்னா முரளி, கபிலா சிரஞ்சிவி, டென்னீஸ் உட்பட பலர் பெரும் திரளான பொதுமக்கள் கலந்துக்கொண்டு அம்மனை வழிபட்டனர். கோயில்  நிர்வாக குழுவை சேர்ந்த முனிகிருஷ்ணன், செங்கல்வராய நாயுடு, அப்புலு யாதவ் ஆகியோர் திருவிழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்….

The post பள்ளிப்பட்டில் ஜாத்திரை திருவிழா கோலாகலம் appeared first on Dinakaran.

Tags : Pallipattil festival festival ,Pallipattu ,Pallipattu Gangaiyamman Jatrai Festival ,Kollapuri Amman ,Mahishasuramarthini Amman ,Pallippattil Jatrai Festival Kolakalam ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை