×

வேங்கடாசலபதி மற்றும் முன்னாள் நீதியரசர் சந்துரு ஆகியோரை வாழ்த்தி சமூக வலைதளங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை: வேங்கடாசலபதி மற்றும் முன்னாள் நீதியரசர் சந்துரு ஆகியோருக்கு சமூக வலைதளங்களில்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதாவது, ஆய்வாளர், பேராசிரியர், பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகத் திறனாளரும்; தமிழ் – ஆங்கிலம் இரண்டிலும் தனித்த எழுத்துநடையைக் கொண்டவருமான ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள் கனடா இலக்கியத் தோட்டத்தின் ‘இயல்’ – வாழ்நாள் சாதனையாளர் விருதுக்குத் தேர்வாகியிருப்பதற்கு எனது வாழ்த்துகள் என ஸ்டலின் கூறியுள்ளார். மேலும் ‘நானும் நீதிபதி ஆனேன்’ என்ற தன்வரலாற்று நூலுக்காக புனைவிலிப் பிரிவில் விருதுக்குத் தேர்வாகியுள்ள முன்னாள் நீதியரசர் கே. சந்துரு அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். செந்தமிழைத் செழுந்தமிழாக்கும் படைப்புகளையும் ஆய்வுகளையும் தொடர்ந்து தருக எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். …

The post வேங்கடாசலபதி மற்றும் முன்னாள் நீதியரசர் சந்துரு ஆகியோரை வாழ்த்தி சமூக வலைதளங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Venkatasalapathy ,Justice Santhuru ,G.K. Stalin ,Chennai ,Tamil Nadu ,Justice ,Santhuru ,B.C. ,
× RELATED தனிக்கட்சி தொடங்குகிறார் ஓ.பன்னீர்செல்வம்?