×

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

சென்னை: தமிழக  வேளாண்மை –  உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:2021-2022ம் ஆண்டு வேளாண்மை துறையின் நிதி நிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் 26 அறிவிப்புகள் செயல்படுத்தப்படவில்லை என பாமக வெளியிட்டுள்ள வேளாண்மை நிழல் நிதி நிலை அறிக்கையில் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.கடந்த 2021-2022 ஆம் ஆண்டு வேளாண்மை துறைக்கென முதன் முறையாக தனி நிதிநிலை அறிக்கை சட்டமன்ற பேரவையில் 14.08.2021 அன்று தாக்கல் செய்யப்பட்டது.  அதில் மொத்தம் 86 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.  பாமக வெளியிட்டுள்ள 2022-2023ம் ஆண்டின் வேளாண்மை நிழல் நிதி நிலை அறிக்கையில் அரசு அறிவித்துள்ள 26  அறிவிப்புகள் செயல்படுத்தப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.  தற்போது, 26 அறிவிப்புகளில் 25 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் யாவும் வெளியிடப்பட்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.திருச்சி-நாகப்பட்டினம் பகுதியினை வேளாண் தொழில் பெருந்தடமாக அறிவிப்பது குறித்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் ஒப்பந்தபுள்ளி நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் இத்திட்டத்திற்கான ஆணைகள் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,M. R.R. K.K. Pannerisselvam ,Chennai ,Agriculture ,M. R.R. K.K. ,Bannerselvam ,Agriculture Department ,M. R.R. K.K. Bannerselvam ,
× RELATED பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக...