×

கொடநாடு கொலை வழக்கு: குற்றவாளி திபுவிடம் விசாரணை

கோவை: ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் மறு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் கைதான குற்றவாளி திபுவிடம் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் மேற்கு மண்டல போலீஸ் ஐஜி சுதாகர் தலைமையிலான போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டது, எஸ்டேட் பங்களாவில் இருந்த ஆவணங்கள், அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் குறித்து அவரிடம் விசாரித்தனர். ‘‘உங்களை கொடநாடு எஸ்டேட்டுக்கு யார் அழைத்தார்கள்? அவர்கள் என்ன கூறினார்கள்? ’’ எனவும் போலீசார் திபுவிடம் கேட்டு தகவல் பெற்றனர். இன்று மற்றொரு குற்றவாளியான ஜித்தின் ஜாயிடம் விசாரணை நடக்கிறது….

The post கொடநாடு கொலை வழக்கு: குற்றவாளி திபுவிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kodanad ,Dibu ,Coimbatore ,Jayalalithaa ,Koda Nadu ,Dinakaran ,
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...