×

செங்கல்பட்டில் இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை!!

செங்கல்பட்டு : செங்கல்பட்டில் இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். செங்கல்பட்டு கே.கே. தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (எ) அப்பு (32), பிரபல ரவுடி. இவர் மீது முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் திமுகவை சேர்ந்த ரவிபிரகாஷ் கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று மாலை கார்த்திக், செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்தில் பைக்கை நிறுத்தும் நேரத்தில், மின்னல் வேகத்தில் எதிரே பைக்கில் வந்த 3 பேர், மறைத்து வைத்திருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை அடுத்தடுத்து அவர் மீது வீசினர். இதில், அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். உடனே அவர்கள், வீச்சரிவாளை எடுத்து கார்த்திக்கை சரமாரியாக வெட்டினர்.இதில், அவர் தலை சிதறி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் மர்ம நபர்கள், செங்கல்பட்டு மேட்டு தெருவில் உள்ள பிரபல ரவுடி மகேஷ் (22) வீட்டுக்கு சென்றனர். அங்கு, அவர் தனி அறையில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பி சென்றனர். அடுத்தடுத்து பிரபல ரவுடிகள் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு, பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பம் தொடர்பாக செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவந்தனர். இந்த நிலையில் செங்கல்பட்டில் இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய தினேஷ், மொய்தீன் ஆகியோர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  சுட்டுக்கொல்லப்பட்ட 2 ரவுடிகள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மாமண்டூர் அருகே 2 பேரை காவல்துறையினர் பிடிக்க முயன்றபோது தினேஷ், மொய்தீன் ஆகியோர் போலீசார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது தற்காப்பிற்காக காவல் ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையில் தனிப்படை போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தினேஷ், மொய்தீன் ஆகியோர் பலியாகி உள்ளனர். அதே சமயம் ரவுடிகள் வெடிகுண்டு வீசி தாக்கியதில் 2 காவலர்கள் காயம் அடைந்தனர்.இதையடுத்து என்கவுண்டர் நடந்த இடத்தில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் விசாரணை நடத்தி வருகிறார்.என்கவுண்டர் செய்யப்பட்ட இருவரின் உடல்களும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது….

The post செங்கல்பட்டில் இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை!! appeared first on Dinakaran.

Tags : chengalpat ,Chengalpattu ,Brinkalputtu ,K. K.K. Street ,Enkounter ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது