×

ஜெராத் பாத் லேப்களில் சலுகை கட்டணத்தில் அலர்ஜி பரிசோதனை

சென்னை: அஞ்சான் பாத் லேப்ஸ் மற்றும் அலர்ஜி பரிசாதனை மையத்தின் சேகரிப்பு மையங்களில் அனைத்து வகையான ஒவ்வாமை மற்றும் அலர்ஜிகளுக்கு 50% தள்ளுபடியில் பரிசோதனை செய்யப்படுகிறது. இதனுடன் வைட்டமின் டி & பி.12 மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த பரிசோதனை முகாம் கொளத்தூர், அண்ணாநகர், அரும்பாக்கம், வேளச்சேரி, ஜமீன் பல்லாவரம், கீழ்ப்பாக்கம், பெரம்பூர், ஆழ்வார்பேட்டை, வடபழனி, தாம்பரம், தண்டையார்பேட்டை, போரூர், குரோம்பேட்டை மற்றும் ஆவடி, திருத்தணி, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, ஊத்தங்கரை மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள கிளைகளில் (இன்று) 29, 30, 31 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.   இதுகுறித்து டாக்டர் பிரசாந்த் ஜெராத் கூறுகையில், ‘‘அலர்ஜி என்பது ஒருவரை துன்பப்படுத்துவது முதல் உயிருக்கு ஆபத்தான எதிர் விளைவுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துவது வரை இருக்கும். இது ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் குணப்படுத்த முடியும். முந்தைய காலங்களில் அலர்ஜியைக் கண்டறிய கையில் 98 குத்தல்கள் செய்யப்பட்ட நடைமுறை இருந்தது. தற்போது, ரத்த பரிசோதனை போதுமானது. தோல் சிவத்தல், தோல் எரிச்சல், தோலில் முகப்பரு, முகம் மற்றும் உதடுகள் வீக்கம், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, தொண்டை வலி, இருமல், தோலழற்சி, சுவாசிப்பதில் சிரமம், சொரியாசிஸ், யூர்டிகேரியா, தும்மல் உள்ளிட்டவை அலர்ஜிக்கான அறிகுறிகள். எனவே, தமிழகம் முழுவதும் உள்ள எங்களது கிளையில் மேற்கண்ட நாட்களில் நடைபெறும் அலர்ஜி பரிசோதனை முகாமில் பொதுமக்கள் பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 9840546959, 9500053403 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,’’ என்றார்….

The post ஜெராத் பாத் லேப்களில் சலுகை கட்டணத்தில் அலர்ஜி பரிசோதனை appeared first on Dinakaran.

Tags : Jerath Bath Labs ,CHENNAI ,Anjan Bath Labs ,Allergy Testing Center ,Dinakaran ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...