×

ஊத்தங்கரையில் முழு கொள்ளளவை எட்டிய பாம்பாறு அணை-உபரி நீர் வெளியேற்றம்

ஊத்தங்கரை :  ஊத்தங்கரையில், பாம்பாறு அணை நிரம்பி வழிவதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகில் உள்ளது பாம்பாறு அணை. நீர்ப்பிடிப்பு பகுதிகளான திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை மற்றும் அங்குத்தி சுனை பகுதியில் மழை பெய்யும்போது, பாம்பாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். அணை கால்வாய் மூலம் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் நேரடியாகவும், 10 ஆயிரம் ஏக்கர் மறைமுகமாகவும் பயனடைந்து வருகிறது. சாசனூர், மூன்றாம்பட்டி, கொட்டுகாரம்பட்டி, நடுப்பட்டி, மாரம்பட்டி, மிட்டப்பள்ளி, பாவக்கல் உள்ளிட்ட பகுதிகளிலும், தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் பாம்பாறு அணைக்கான நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இதனால், அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து, அணையின் பாதுகாப்பினை கருதி, உபரிநீர் அப்படியே பிரதான மதகு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 170 கனஅடி வீதம் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் சாத்தனூர் அணைக்கு பெருக்கெடுத்துச் செல்கிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் மழை வலுக்கும்பட்சத்தில் பாம்பாறு அணைக்கான நீர்வர்தது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாசன வசதிக்காக மாவட்ட நிர்வாகம் உடனடியாக பாம்பாறு அணையின் கால்வாயில் தண்ணீரை திறக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post ஊத்தங்கரையில் முழு கொள்ளளவை எட்டிய பாம்பாறு அணை-உபரி நீர் வெளியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Uthalingaram ,Uthalingar ,Uthankaram ,Krishnagiri District ,Uthankarai, Pamarai ,Pancake Dam ,Uttarnakaran ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில்...