×

ஐரோப்பிய நாடுகளில் தடை எதிரொலி: கோவிஷீல்டு பக்க விளைவு குறித்து தீவிர கண்காணிப்பு: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: ரத்தம் உறைதல் பாதிப்பை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில்  அஸ்ட்ரஜெனகா கொரோனா தடுப்பூசிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில்,  இந்தியாவில் கோவிஷீல்டு பக்க விளைவு குறித்து தீவிரமாக  கண்காணிக்கப்படுவதாக தேசிய கொரோனா பணிக்குழுவின் செயல்பாட்டு ஆராய்ச்சி  பிரிவு தலைவர் என்.ஆர்.அரோரா கூறி உள்ளார். இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு  பல்கலைக்கழகமும், அஸ்ட்ரஜெனகா மருந்து நிறுவனமும் இணைந்து தயாரித்த  கோவிஷீல்டு மற்றும் ஐதராபாத்தின் பாரத் பயோடெக், ஐசிஎம்ஆர்இணைந்து  தயாரித்த கோவாக்சின் ஆகிய இரு கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில்  பயன்பாட்டில் உள்ளது. இதுவரை நாடு முழுவதும் 2.8 கோடி பேருக்கு இவ்விரு  தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதற்கிடையே, டென்மார்க், ஐஸ்லாந்து, நார்வே  உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் அஸ்ட்ரஜெனகாவின் கொரோனா தடுப்பூசிக்கு  திடீர் தடை விதித்துள்ளன.அந்நாடுகளில் அஸ்ட்ரஜெனகா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ரத்தம்  உறைதல் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இது இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் வழங்கப்படும் அஸ்ட்ராஜெனகாவின்  தடுப்பூசி மீது கவலையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இந்திய மருந்து  ஆராய்ச்சி கவுன்சிலின் அமைப்பான தேசிய கொரோனா பணிக்குழுவின் செயல்பாட்டு  ஆராய்ச்சி பிரிவு தலைவர் என்.ஆர்.அரோரா கூறுகையில், ‘‘நாங்கள் இரு  தடுப்பூசியின் பக்கவிளைவுகளையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.  இந்தியாவில் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. கவலை  கொள்ளும்படியான பாதிப்புகள் இருந்தால் நிச்சயம் அது தெரிவிக்கப்படும். தடுப்பூசி  போடுவதில் கடுமையான கண்காணிப்பு நெறிமுறைகள் உள்ளன. தற்போதைய  நிலையில் எந்த அச்சத்திற்கும் அவசியமில்லை’’ என்றார்….

The post ஐரோப்பிய நாடுகளில் தடை எதிரொலி: கோவிஷீல்டு பக்க விளைவு குறித்து தீவிர கண்காணிப்பு: மத்திய அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : European ,New Delhi ,GoviShield ,India ,
× RELATED உத்தரகாண்டில் ₹130 கோடி கிரிப்டோகரன்சி பறிமுதல்