×

ஆங்கிலம் தெரியாமல் அவமானப்பட்டேன்: பாக்யஸ்ரீ போர்ஸ் வேதனை

ஐதராபாத்: தமிழ் மற்றும் தெலுங்கு படவுலகில், முன்னணி நடிகை களில் ஒருவராக இருப்பவர் பாக்யஸ்ரீ போர்ஸ். சமீபத்தில் நாகார்ஜூனா, அமலா தம்பதியின் மகன் அகில் அக்கினேனி நடிப்பில் வெளியான ‘லெனின்’ என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அது வெற்றிபெற்றுள்ளது. தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘சேயோன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மகாராஷ்டிராவை பூர்வீகமாக கொண்ட அவர், இந்தியில் சில படங்களில் நடித்தார். பிறகு ‘மிஸ்டர் பச்சன்’ என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து ‘கிங்டம்’ என்ற படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்தார். பிறகு துல்கர் சல்மானுடன் ‘காந்தா’ என்ற படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார்.

இந்நிலையில் பாக்யஸ்ரீ போர்ஸ் அளித்துள்ள பேட்டியில், ‘எனது தந்தைக்கு நைஜீரியா நாட்டில் வேலை கிடைத்ததால், குடும்பத்துடன் அங்கு குடிபெயர்ந்தோம். அப்போது எனக்கு ஆங்கிலம் தெரியாது. அங்குள்ள பள்ளியில் இந்திய வம்சாவளி மாணவர்கள், எனக்கு ஆங்கிலம் தெரியாததை அறிந்து, ‘எப்படி ஒருவருக்கு ஆங்கிலம் தெரியாமல் இருக்கும்?’ என்று மட்டம் தட்டிவிட்டு கேலி செய்தார்கள். அது என்னை காயப்படுத்தியது. எனினும், அந்த வலியையே பாடமாக மாற்றிக்கொண்டு தீவிரமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொண்டேன். இன்று நான் சரளமாக ஆங்கிலம் பேச அந்த வலிகளே காரணம்’ என்றார்.

Tags : Bhagyashree Fors' ,Hyderabad ,Bhagyashree Fors ,Nagarjuna ,Amala ,Akhil Akkineni ,Sivakarthikeyan ,Maharashtra ,
× RELATED போட்டோ ரியலிஸ்டிக் ஏஐ படம் அவிரா