×

‘ஈவில் டெட் பர்ன்’ – திரைவிமர்சனம்

நியூ லைன் சினிமா, ஸ்கிரீன் ஜெம்ஸ், கோஸ்ட் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் செபாஸ்டியன் வானிசெக் இயக்கத்தில் சௌஹெய்லா யாகூப், டாண்டி ரைட், ஹண்டர் டூஹன், லூசியன் புக்கானன், எர்ரோல் ஷாண்ட், மாட் டேவி, ஜார்ஜ் புல்லர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ” ஈவில் டெட்: பர்ன்” . 1978ஆம் ஆண்டு ” வித்இன் த வுட்ஸ் ” குறும்படம் மூலம் ஆரம்பித்த வரலாறு இப்போது ஆறாவது பாகமாக வெளியாகியிருக்கிறது.

கணவரின் மரணத்துக்குப் பிறகு மாமியார் வீட்டிற்குச் செல்லும் ஆலிஸ் ( சௌஹெய்லா), அங்கு ஒரு தீய ஆவியின் பிடியில் சிக்கும் குடும்பத்துடன் உயிர் பிழைக்க போராட வேண்டிய சூழல். மொத்த குடும்பமும் தீய சக்தியின் பிடியில் சிக்கியிருக்கிறது. மேலும் இதில் ஆலிஸ் மிகவும் சிக்கலனா நிலையில் மாட்டிக்கொள்ள முடிவு என்ன என்பது திக் திக் திகில் கிளைமாக்ஸ்.

கதையின் ஒற்றை ஆர்மியாக சௌஹெய்லா கதைக்கு தான் பங்கை கொடுத்திருக்கிறார். எனினும் துவக்கத்திலேயே இவர் ஒருத்தர் தான் உயிர் தப்பித்து வருவார் என்பது யூகிக்க முடிவது பழமை.

ஒளிப்பதிவாளர் அலெக்ஸாண்ட்ரே மின்யோன் உருவாக்கிய இருள் சூழ்ந்த காட்சிகள் கதைக்கு பலமாக நிற்கின்றன. பெஞ்சமின் வால்ஃபிஷின் பின்னணி இசை ஒவ்வொரு பதற்றமான தருணத்தையும் மேலும் தீவிரப்படுத்துகிறது. லிலியன் கொர்னெஸின் படத்தொகுப்பு காட்சிகளுக்கு விறுவிறுப்பை அளிக்கிறது. அதே நேரத்தில், எஃபெக்ட்ஸ் மற்றும் மேக்கப் பணிகள் படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன.

சௌஹெய்லா யாகூப் ஆலிஸ் கதாபாத்திரத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வழங்கியுள்ளார். ரத்தம் தெறிக்கும் காட்சிகளும், எதிர்பாராத திருப்பங்களும் ஈவில் டெட் தொடருக்கே உரிய அனுபவத்தை தருகின்றன. சில இடங்களில் அளவுக்கு மீறிய கோரக் காட்சிகள் கதையை விட முன்னிலைப்படுகின்றன.

இருப்பினும், திகில் மற்றும் ஹாரர் ரசிகர்களுக்கு முதல் ஆர்வத்தைத் தூண்டிய ஹாலிவுட் ஹாரர் படம் என்றால் அது ” ஈவில் டெட்” பாகங்கள் தான். எனவே இந்த பாகங்களின் ரசிகர்களுக்கு “ஈவில் டெட்: பர்ன் ” திருப்திகரமான அனுபவத்தை வழங்கும்.

Tags : New Line Cinema ,Screen Gems ,Ghost House Pictures ,Sebastian Vanishek ,Souheila Yacoub ,Dandy Wright ,Hunter Doohan ,Lucian Buchanan ,Errol Shand ,Matt Davy ,George Fuller ,
× RELATED அஜய் தேவ்கன் நடித்த ‘தமால் 4’… 4 நாட்களில் ரூ.100 கோடி வசூல்!