×

அஜய் தேவ்கன் நடித்த ‘தமால் 4’… 4 நாட்களில் ரூ.100 கோடி வசூல்!

பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில், இயக்குநர் இந்திர குமார் இயக்கிய ‘தமால் 4’ திரைப்படம் கடந்த ஜூலை 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் அஞ்சலி ஆனந்த், ஈஷா குப்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம், தற்போது வசூலிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது.

படக்குழு வெளியிட்டுள்ள தகவலின்படி, ‘தமால் 4’ திரைப்படம் வெளியான முதல் 4 நாட்களில் உலகளவில் ரூ.102.83 கோடி வசூல் செய்து ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. எனினும், சுமார் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், முதல் 4 நாட்களில் பட்ஜெட்டில் பாதி அளவிற்கும் குறைவான வசூலை மட்டுமே ஈட்டியிருப்பதால், எதிர்பார்த்த அளவிலான தொடக்கத்தை பெறவில்லை என்ற கருத்து பாலிவுட் வட்டாரங்களில் எழுந்துள்ளது. இருப்பினும், வரும் வார இறுதி மற்றும் அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்குமா என்பது திரையுலகினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Ajay Devgn ,Bollywood ,Indra Kumar ,Anjali Anand ,Esha Gupta ,
× RELATED ‘ஈவில் டெட் பர்ன்’ – திரைவிமர்சனம்