×

அமமுக – தேமுதிக கூட்டணி உறுதியானது: சட்டப்பேரவை தேர்தலில் 60 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட உள்ளதாக அறிவிப்பு..!

சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் அமமுக கூட்டணியில் தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை திரும்ப பெறுவதாக அமமுக அறிவித்துள்ளது. கும்மிடிப்பூண்டி, திருத்தணி, ஆவடி, வில்லிவாக்கம், திருவிக நகர் உள்ளிட்ட 60 தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் பிரசாரம், தொகுதி பங்கீடு, கூட்டணி, தேர்தல் அறிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தலில், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. போட்டியிட இருக்கிறது. தற்போது வரை அ.ம.மு.க. தலைமையிலான கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு 6 தொகுதிகளும், ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகளும், கோகுல மக்கள் கட்சி மற்றும் மருதுசேனை சங்கம், விடுதலை தமிழ்ப்புலிகள், மக்களரசு கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக உடன் அமமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற போதும், கூட்டணி குறித்து இதுவரை எந்தவித உடன்பாடும் எட்டப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், அமமுக – தேமுதிக இடையேயான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் அமமுக – தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கையெழுத்துடன் ஒப்பந்த கடிதத்தை பெற்று கொண்டார் தேமுதிக அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன். இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் அமமுக கூட்டணியில் தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி, திருத்தணி, ஆவடி, வில்லிவாக்கம், திருவிக நகர் உள்ளிட்ட 60 தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது.
1. கும்மிடிப்பூண்டி  (1)2. திருத்தணி (3)3. ஆவடி (6)4. வில்லிவாக்கம்  (14)5. திரு.வி.க நகர் (தனி) (15)6. எழும்பூர்  (தனி)(16)7. விருகம்பாக்கம்  (22)8. சோழிங்கநல்லூர் (27)9. பல்லாவரம்(30)10. செய்யூர் (தனி) (34)11. மதுராந்தகம் (தனி) (34)12. கீழ்வைத்தனன் குப்பம் (தனி) (45)13. ஊத்தங்கரை (தனி) (51)14. வேப்பனஹள்ளி (54)15. பாலக்கோடு (57)16. பெண்ணாகரம் (58)17. செங்கம்  (தனி) (62)18. கலசப்பாக்கம் (65) 19. ஆரணி  (67) 20. மயிலம் (71) 21.  திண்டிவனம்  (தனி) (72) 22.  வானூர் (தனி) (73) 23.  திருக்கோயிலூர் (76) 24. கள்ளக்குறிச்சி (தனி) (80) 25.  ஏற்காடு (பழங்குடி ) (83) 26.  மேட்டூர் (85) 27. சேலம் மேற்கு(88) 28. நாமக்கல்(94) 29 குமாரபாளையம் (97) 30. பெருந்துறை(103) 31. பவானிசாகர் (தனி) (107) 32.  கூடலூர் (தனி) (109) 33. அவினாசி (தனி)(112) 34.  திருப்பூர் வடக்கு (113) 35. வால்பாறை (தனி) (124)36. ஒட்டன்சத்திரம்  (128) 37. நிலக்கோட்டை (தனி) (130) 38. கரூர் (135) 39. கிருஷ்ணராயபுரம் (தனி) (136) 40. மணப்பாறை (138) 41. திருவெறும்பூர் (142) 42. முசிறி (154) 43. பெரம்பலூர்  (தனி)  (147) 44. திட்டக்குடி (தனி)(151) 45. விருத்தாச்சலம்  (152) 46. பண்ருட்டி (154)  47. கடலூர் (155) 48.  கீழ்வேளூர் (தனி) (164) 49. பேராவூரணி (177) 50. புதுக்கோட்டை (180) 51. சோழவந்தான் (தனி) (190) 52. மதுரை மேற்கு (194) 53. அருப்புக்கோட்டை (207) 54. பரமக்குடி  (தனி) (207) 55. தூத்துக்குடி (214) 56. ஓட்டப்பிடாரம் (தனி)  (217) 57. ஆலங்குளம்  (223) 58. ராதாபுரம்  (228) 59. குளச்சல் (231) 60. விளவங்கோடு (233)

The post அமமுக – தேமுதிக கூட்டணி உறுதியானது: சட்டப்பேரவை தேர்தலில் 60 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட உள்ளதாக அறிவிப்பு..! appeared first on Dinakaran.

Tags : Amuka-Termuthika alliance ,Nemuthika ,Chennai ,Amuka Alliance ,National Assembly ,Themuthika ,Amuka-Themudika Alliance ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் இருந்து...