×

எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல வீட்டில் பிளக்ஸ் வைத்து விழிப்புணர்வு

தஞ்சை : தஞ்சாவூர் நாஞ்சிகோட்டை சாலை காமராஜர் நகர் 3ம் தெருவில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பொன்னுசாமி. இவரது மகன் டாக்டர் பிரபு ராஜ்குமார். இவர்கள் தங்களது வீட்டின் முன் “ எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல “ என்ற வாசகம் தாங்கிய டிஜிட்டல் பேனர் வைத்துள்ளனர்.இது குறித்து அவர்கள் கூறுகையில், வாக்களிப்பது ஜனநாயக கடமை. வாக்குகளுக்காக வேட்பாளர்கள் பணம் கொடுப்பது தவறானது. நாங்கள் எங்கள் ஓட்டுகளை விற்கவில்லை. வேட்பாளர்கள் கொடுக்கும் பணம் எங்களுக்கு தேவையில்லை . எங்களுக்கு தேவையானது சிறப்பான திட்டங்கள் முறையாக செய்து தரப்பட வேண்டும் என்பதே. பணம் வாங்காமல் வாக்களித்தால் தான் இந்த பகுதிக்கு தேவையான சுகாதாரம், தரமான கல்வி, சாலை வசதிகள், குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளை உரிமையோடு கேட்டுப்பெறமுடியும் . வேட்பாளர்கள் பணம் கொடுப்பது எதற்காக என்பதை அறியாமல் ஒரு சில மக்கள் வாங்கிக் கொள்கின்றனர் . அவர்கள் கொடுக்கும் பணத்தை பெற்றுக்கொண்டால், அவர்கள் தவறுகள் செய்வதற்கு நாமே அடித்தளம் அமைத்துக் கொடுக்கின்ற நிலை உருவாகும் , நாம் அவர்களிடம் எதையும் உரிமையோடு கேட்க முடியாது , இதனால் நம் சந்ததியினர் தான் பாதிக்கப்படுவார்கள். எனவே தங்களது வாக்குகளை யாரும் விற்பனை செய்யாமல், உரிமைக்காக வாக்களிக்க வேண்டும் என்றனர் . இவர்களது இந்த முயற்சி இந்த பகுதி மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது….

The post எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல வீட்டில் பிளக்ஸ் வைத்து விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Thanjavur Nanchikottai Road Kamarajar Nagar 3rd Street ,Dinakaran ,
× RELATED முன்னாள் படைவீரர்கள் குறைதீர் முகாம்