×

சிங் கீதம் விமர்சனம்…

குபேரபுரம் என்ற ஊரில் தங்கச்சுரங்கம் இருக்கிறது. அதை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் இருக்கின்றனர். அப்பகுதியில் இருக்கும் மரத்தை அஹில்யா பம்ரூ தனது தாயாக நினைக்கிறார். ஆனால், தங்கத்தை தோண்ட மரம் வெட்டப்படுகிறது. அப்போது தங்கச்சுரங்க அதிபரின் மகன் என்று சொல்லி அயான் வருகிறார். அவரும், அஹில்யா பம்ரூவும் நெருங்கி பழகுகின்றனர். அப்போது, ஊரில் பேசிக்கொண்டு இருந்த அனைவரும் பாட ஆரம்பிக்கின்றனர்.

அது குபேரன் விடுத்த சாபம் என்று நம்புகின்றனர். அதிலிருந்து ஊர் மக்கள் மீண்டார்களா என்பது மீதி கதை.  94 வயது கொண்ட சிங்கீதம் சீனிவாசராவ் எழுதி இயக்கியுள்ளார். அவரது துணிச்சலையும், வித்தியாசமான முயற்சியையும் பாராட்ட வேண்டும். அயான், அஹில்யா பம்ரூ, ஷாலினி கொண்டெபுடி, நிவேதா பெத்துராஜ், ராகுல் ரவீந்திரன், துளசி, சிவநாராயணா, வம்சி, பானர்ஜி உள்பட அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

அங்கூர்.சியின் ஒளிப்பதிவும், தேவிஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசையும் கூடுதல் பலம் சேர்த்துள்ளன. வசனங்களை பாடல்களாக்கி இருப்பது சிறிது சோர்வை ஏற்படுத்தினாலும், கிளைமாக்சில் அதற்கான நியாயத்தை செய்துள்ளதால் ரசிக்க முடிகிறது. இது அதீத கற்பனை கலந்த கதை என்பதால், லாஜிக் மீறல்களை கண்டுகொள்ள கூடாது.

Tags : Kuberapuram ,Ahilya Bamru ,Ayan ,Kubera ,
× RELATED பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தத்துடன்...