×

ராஷ்மிகா போன்று என்னால் ஆக முடியாது: ஐஸ்வர்யா லட்சுமி

சென்னை: விஷ்ணு விஷால் ஜோடியாக ‘கட்டா குஸ்தி’ 2ம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார் ஐஸ்வர்யா லட்சுமி. கடந்த 2022ம் ஆண்டு வெளியான ‘கட்டா குஸ்தி’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இப்படத்தில் குஸ்தி வீராங்கனையாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். வரும் ஜூலை 3ம் தேதி திரைக்கு வரவுள்ள ‘கட்டா குஸ்தி 2’ புரொமோஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

அப்போது ஒரு நேர்காணலில் ஐஸ்வர்யா லட்சுமியிடம் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பூங்குழலி என்ற சிறிய கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்தது ஏன்? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘கதாபாத்திரம் பெரியதா, சிறியதா என்பது முக்கியமில்லை.

அந்த கதை நமக்கு திருப்தி அளிக்கிறதா என்பதுதான் முக்கியம். அனைவராலும் ராஷ்மிகா மந்தனா போன்று ஆகிவிட முடியாது. முழுநீள கமர்ஷியல் ஹீரோயின் வேடங்களை அவர் மிகவும் நளினமாக செய்கிறார். அவர் போன்று நடனம் ஆடவோ, முழுமையான கமர்ஷியல் ஹீரோயினாகவோ என்னால் இருக்க முடியாது. அது மிகவும் கடினமான விஷயம்’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : Rashmika ,Aishwarya Lakshmi ,Chennai ,Vishnu Vishal ,Sean Roldan ,Poonkuzhali ,
× RELATED பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தத்துடன்...