×

நவகிரக கவசங்கள்

வெற்றி மேல் வெற்றி தரும்  கவசங்கள்சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது  ஆகியவற்றை நவகிரகம் என்பர். விநாயகர், முருகன், சிவன் போன்ற முதன்மை கடவுளை வணங்கி வழிபடுவது போல, இந்த ஒன்பது கிரகங்களை பூஜிப்பதும் போல மரபு ஆகும். இந்த இதழிலிருந்து ஆன்மீக பலன் வாசகர்களுக்காக இந்த புத்தாண்டை (2022) முன்னிட்டு நவ கிரஹ கவசத்தில் ஒவ்வொரு கிரகங்கள் பற்றி   தருகிறோம். இந்த இதழில் வரும் கவசம் சூரிய கவசமாகும்.வேதங்களில் முக்கிய கடவுள் என்று கொண்டாடப் படுகிற சூரியன் கிரகங்களுக்கு அதிபதி. சூரிய உபநிஷத் எல்லாம் சூரியனிலிருந்து வந்து, சூரியனிலையே இருக்கிறது என்று கூறுகிறது. ஸஹஸ்ர கிரணனாகிய சூரியன் எல்லாவற்றிற்கும் ஒளி கொடுக்கிறார். சூரிய மதசன்மத்தில் சௌரம் எனப்படும். சூரியனுக்கு சம் ஞா, சாயா என இரு மனைவிகள். தேவ ரத்னமான காயத்திரி உபாசனையில் த்ருகால சந்தியா வந்தனம் செய்வதில் சூரியனில் சாவித்திரி, சரஸ்வதி, காயத்ரி ஆகிய சக்திகளை பூஜை செய்கின்றனர். சூரியனுக்கு க்ரமமாக நமஸ்காரம் செய்வது நமது உடல் ஆரோக்கியத்துக்கு நல்ல தாகும். ஜோதிடத்தில் சூரியன் கிழக்கு திசைக்கு அதிபதியாகவும், பிரதி தேவதையாக அக்னி, இசுவான் என்பவரை உடையவனாகவும் குறிப் பிடுகிறார். நவகிரக ஆலயங்களில் சூரியனுக்கு உரியது சூரியனார் கோயிலாகும். இந்த ஆலயத்தின் மூர்த்தியின் பெயர்  ஸ்ரீ சிவ சூரிய நாராயணஸ்வாமி. சூரிய தியான சுலோகம் த்யாஎத் சூரிய மந்னத கோடி  கிரணம் தேஜோ மயம் பாஸ்கரம் பக்தாநாம் அபயப்ரதம் தி நகரம்ஜோதிர் மயம் சங்கரம் ஆதித்யம் ஜெகதீசம்  அச்யுதம் அஜம் த்ரை லோக் ய  சூடாமணிம் பக்தா பீஷ்ட வரப்ரதம்  தி  நமணீ ம் மார்த்தாண்ட மாத்யம் சுபம்.ஸ்ரீ சூர்ய காயத்ரி ஓம் அச்வ த்வஜாய வித்மஹே பாச ஹஸ் தாய தீமஹி தந்நோ சூரிய ப்ரசோதயாத்.ஓம் அஸ்ய ஸ்ரீ ஸூர்ய கவச மஹாமந்த்ரஸ்ய | அகஸ்த்யோ பகவான் ரிஷி: | அநுஷ்ட்டுப் சந்த: | ஸூர்யோ தேவதா | ஸ்ரீ ம் பீஜம்| ணீம் ஸக்தி: |  ஸூம் கீலகம் | மம ஸூர்ய ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே விநிேயாக: | ஹ்ராம் அங்குஷ்டாப்யாம் நம: | ஹ்ரீம் தர்ஜநீப்யாம் நம: |  ஹ்ரூம் மத்யமாப்யாம் நம: | ஹ்ரைம் அநாமிகாப்யாம் நம: | ஹ்ரௌம் கநிஷ்டிகாப்யாம் நம்: | ஹ்ர: கரதல கரப்ருஷ்டாப்யாம் நம: | ஹ்ராம் ஹ்ருதயாய நம: | ஹ்ரீம் ஸிரஸே ஸ்வாஹா | ஹ்ரூம் ஸிகாயை வஷட் | ஹ்ரைம் கவசாய  ஹும் | ஹ்ரௌம் நேத்ர த்ரயாய வௌஷட் | ஹ்ர: அஸ்த்ராய பட் | பூர்புவஸ்ஸுவரோம் இதி திக் பந்த: | த்யானம்…ஜபாகுஸுமஸங்காஸம் த்விபுஜம் பத்மஹஸ்தகம் |ஸிந்தூராம்பர மால்யம் ச ரக்த கந்தாநுலேபனம் || 1மாணிக்ய ரத்ன கசித ஸர்வாபரண பூஷிதம் |ஸப்தாஸ்வரதவாஹம்ச மேரும் யாந்தம் ப்ரதக்ஷணம் || 2தேவாஸுரவரைர்வந்த்யம் ரஸ்மிபி: பரிவேஷ்ட்டிதம் |ஸூர்யம் த்யாத்வா ஸுவர்ணாபம் படேச்ச கவசம் முதா || 3அத கவசம்-க்ருணி: பாது ஸிரோதேஸம் ஸூர்ய: பாது லலாடகம் |ஆதித்யோ லோசனே பாது ஸ்ருதீ பாது திவாகர: || 4க்ராணம் பாது ஸதாபாநு: முகம் பாது ஸதா ரவி: |ஜிஹ்வாம் பாது ஜகன் நேத்ர: கண்டம் பாது விபாவஸு: || 5ஸ்கந்தௌ க்ரஹபதி: பாது புஜௌ பாது ப்ரபாகர: |கராவப்ஜகர: பாது ஹ்ருதயம் பாது பானுமான் || 6மத்யம் பாது ஸுஸப்தாஸ்வ: நாபிம் பாது நபோமணி: |த்வாதஸாத்மா கடிம் பாது ஸவிதா பாது ஸக்தினீ || 7ஊரூ பாது ஸுரஸ்ரேஷ்ட்ட: ஜாநுனீ பாது பாஸ்கர: |ஜங்கே மே பாது மார்தாண்ட: குல்பௌ பாது த்விஷாம் பதி: || 8பாதௌ தினமணி: பாது பாது மித்ரோsகிலம் வபு: |ஆதித்ய கவசம்புண்யம் அபேத்யம் வஜ்ரஸன்னிபம் || 9யோ தாரயதி புண்யாத்மா பக்திமான் ஸ து மாணவ: |ஸர்வரோக பயாதிப்ய: முச்யதே நாத்ர ஸம்ஸய: || 10ஸம்வத்ஸரம் உபாஸித்வா ஸாம்ராஜ்ய பதவீம் லபேத் |அனேகரத்ன ஸம்யுக்தம் ஸ்வர்ணமாணிக்ய பூஷணம் || 11கல்ப வ்ருக்ஷ ஸமாகீர்ணம் கதம்ப குஸும ப்ரபம் |விஸேஷ ரோக ஸாந்த்யர்தம் ஸூர்யம் த்யாயேத்து மண்டலே || 12சிந்தூர வர்ணாய ஸுமண்டலாய ஸுவர்ண ரத்னாபரணாய துப்யம் |பத்மாபிநேத்ராய ஸுபங்கஜாய ப்ரஹ்மேந்த்ர நாராயண ஸங்கராய || 13ஸம்ரக்த சூர்ணம் ஸஸுவர்ணதோயம் ஸகுங்குமாபம் ஸகுஸம் ஸபுஷ்பம் |ஸம்ரக்த மாதாய ச ஹேமபாத் ஸஹஸ்ரபானோ பகவன் ப்ரஸீத || 14- கவசம் தொடருவோம்(அடுத்த இதழில் சந்திரன் கவசம்)அனுஷா…

The post நவகிரக கவசங்கள் appeared first on Dinakaran.

Tags : Sun ,Moon ,Mars ,Mercury ,Jupiter ,Venus ,Saturn ,Rahu ,Ketu ,
× RELATED கும்பம்