×

தாயே எமக்காக மன்றாடும்!

கபிரியேல் வானதூதர் மரியாவுக்கு மங்கள வார்த்தை சொன்னபோது, ‘அருள் நிறைந்த மரியே வாழ்க!’ என்றார். இதன்மூலம் அன்னை மரியா ‘அருள் நிறைந்தவர்’ ஆனார். இவ்வாறு மரியா பக்தியை, கடவுள் தொடங்கி வைத்தார். எலிசபெத் வழியாக தூய ஆவியானவர் இன்னும் ஒருபடி மரியா வணக்கத்தை உயர்த்தினார். மேலும், ‘‘தூய ஆவி நிரம்பியவராய் பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்’’ என்று எலிசபெத் கூறினார். இவ்வாறு தூய ஆவியே எலிசபெத் வழியாக மரியாவை ‘ஆண்டவரின் தாய்’ ஆசி பெற்றவர், மேலும் பேறுபெற்றவர் என்று போற்றுவதைத் திருவிவிலியம் நமக்கு விளக்கமாகவே கூறுகிறது.அனைத்திற்கும் மேலாக அன்னை மரியாவே, ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ் நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறு பெற்றவர் என்பர். ஏனெனில், வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். (லூக்கா 1:47-49) என்று கூறியதுதான் இன்று உலகம் எங்கும் நடந்துவருகிறது. அன்னை மரியாவுக்கு நாம் காட்டுவது சிறப்பு வணக்கம் என்பதையும் நாம் அனைவரும் உணர வேண்டும். இறைவனின் தாய் மரியா என்பதால் நம்முடைய சிறப்பு வணக்கத்தைப் பெறுகிறார். அவர் இறைவனின் தாயும் நமது தாயுமாக இருப்பதால் சிறப்பான வணக்கத்திற்கு அவர் உரியவர். இயேசுவின் பேறு பலன்களால் மரியா மீட்கப்பட்டார். இயேசுதான் அவரை மீட்டார். பாவத்திற்கு உட்படாமல் பாதுகாத்த மீட்புதான் அன்னை மரியாவின் மீட்பு.கடவுள்  காலம் கடந்தவர். அவருக்கு எல்லாமே நிகழ்காலம். எனவே நமது வரலாற்றில் வரும் காலத்தில் நடப்பதை முன்கூட்டியே அன்னை மரியாவுக்கு அளித்தார் இறைவன். மரியா தன் மகனைப் பெற்றெடுக்கும் வரை ேயாசேப்பு அவரோடு கூடி வாழவில்லை. யோசேப்பை பொறுத்தவரையில் அவர் ஒரு நீதிமான். நீதிமான்கள் மற்றவர்களின் பொருட்களையோ, சொத்துக்களையோ அபகரிக்க மாட்டார்கள். இதன் பின்னணியில் மரியா தம்மையே இறைவனுக்கு ஒப்புக் கொடுத்திருந்தார். எனவே அவர் இறைவனுக்குச் சொந்தமானவர். இறைவனுக்கு உடைமையான மரியாவை தம்முடைய உடைமையாக மாற்றுவதற்கு யோசேப்பு முயற்சி செய்யவில்லை. மரியாவின் கன்னிமை இறைவனுக்குத் தம்மையே முழுமையாக அர்ப்பணித்தலில்தான் அடங்கியுள்ளது. ‘‘நான் ஆண்டவரின் அடிமை, உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்’’ என்று வானதூதரிடம்கூறியவர் அல்லவா?கடவுள் மரியாவை மனிதருள் மாணிக்கமாக, பெண்களுக்குள் பேறு பெற்றவராக மதித்ததால் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் எல்லோரும் அன்னை மரியா மீது அளவு கடந்த அன்பையும், மரியாதையையும், பக்தியையும், வணக்கத்தையும் செலுத்துகின்றனர். புனித எபிபானியுஸ், ‘‘மரியாவிற்கு தேவ தாய்க்குரிய வணக்கத்தையும், ஆனால் தந்தை மகன் தூய ஆவியாகிய மூவொரு கடவுளுக்கே ஆராதனையும், மகிமையும்செலுத்தக்கடவோம்’’ என்றார்.‘‘பனிமயத்தாயே! பரிதவிப்போரின்பாதுகாவலே!  எமக்காக இயேசுவை மன்றாடும்.’’- ‘‘மணவைப்பிரியன்’’ஜெயதாஸ் பெர்னாண்டோ…

The post தாயே
எமக்காக
மன்றாடும்!
appeared first on Dinakaran.

Tags : Gabriel ,Mary ,
× RELATED திருப்பத்தூர்: தனியார் பள்ளியில் புகுந்த சிறுத்தை