×

சூரியதோஷம் போக்கும் சீர்மிகு தலங்கள்

பக்குவம் தரும் பரிதி நியமம் பரிதி என்றால் சூரியன் – நியமம் என்றால் கோயில், சூரியன் வழிபட்டுப் பேறு பெற்ற கோயில் பரிதி நியமம் என்று அழைக்கப்படுகின்றது என்பர். இந்நாளில் இக்கோயில்  பருத்தியப்பர் கோயில் என வழங்குகிறது. சுவாமிக்கு பாஸ்கரேஸ் வரர் பருதியப்பர் என்ற பெயர்கள் வழங்குகின்றன. இது தாங்கமுடியாத வெப்பத்துடன் விளங்கும் சூரியன் குளிர்ச்சியுடன் திகழச் சித்திரைமாதப் பௌர்ணமி நாளில் மணலைக் கூட்டிச் சிவலிங்கம் செய்து வழிபட்ட தலம் என்பர். சூரியனால் உண்டாக்கப் பெற்ற தீர்த்தம் ஆலயத்தின் முன்னேயுள்ளது. சூரியன் பூசித்ததை நினைவு கூறும் வகையில் பங்குனிமாதம் 18,19,20 ஆகிய தேதிகளில் சூரியக் கிரணங்கள் சுவாமியின் மீது படிகின்றன. அம்பிகையின் பெயர் மங்கலநாயகி என்பதாகும். இக்கோயிலைத் திருநாவுக்கரசர் ‘‘பருதி நியமத்தார் பன்னிருநாள்’’ என்று தமது கோயில் பதிகத்தில் குறிப்பிடுகின்றார். இதனை பன்னிருநாள் பருதிநியமம் என்று குறித்து பன்னிரண்டு நாட்கள் இங்கு சூரியன்  வழிபட்டான் என்பர்.இது தஞ்சாவூர் பட்டுக்கோட்டை சாலையில் தஞ்சையில்  இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஒரு காலத்தில் இது சூரியனின்  கோயிலாக இருந்து பின்னாளில் சிவன் கோயிலாக மாற்றப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இங்கு கருவறைக்கு முன்பு அமைந்துள்ள நந்தி பலிபீடத்திற்கு பின்புறம் சூரியன் மூலவரை நோக்கி வணங்கும் பாவனையில் எழுந்தருளியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.திருக்கழுக்குன்றமான பாஸ்கரபுரிசிவபெருமான் அருளால் தோன்றிய பன்னிரண்டு சூரியர்கள் 1.வைகருத்தன் 2.விவசுவான் 3.மார்த்தாண்டன் 4.பாஸ்கரன் 5.இரவி 6. லோகப்பிரகாசன் 7. சாக்கி  8.சுவிக்கிரமன் 9.ஆதித்தன் 10.சூரன் 11.அஞ்சுமாலி 12.திவாகரன் என்பவர்களாவர். இவர்களைத் துவாதச ஆதித்தியர்கள் என்றழைப்பர். ஒரு சமயம் இவர்கள் தங்களில் யார் உலகில் பணிசெய்வது என்று போட்டியிட்டுக் கொண்டனர்.  பிரம்மன் அவர்களை சித்திரை தொடங்கி மாதத்திற்கு ஒருவராகப் பணி செய்யும்படி  ஆணையிட்டார்.அவர்கள் அப்படிப் பணி செய்யும் காலத்தில் மந்தேகர் முதலிய அசுரர்கள் தடைகளை உண்டாக்கினர். அவர்கள் மீண்டும் பிரம்மனை அடைந்து தமது குறையை முறையிட்டனர். அவர் அவர்களைத் திருக்கழுக்குன்றத்திற்குச் சென்று வழிபடும்படிக் கூறினார். அதன்படியே அவர்கள் உருத்திரகோடியாகிய திருக்கழுக் குன்றத்தை அடைந்து சிவபெருமானை வழிபட்டனர். அங்கு அவர்களுடைய பக்திக்கு இரங்கிய சிவபெருமான் அவர்கள்  முன்பு தோன்றி காட்சியளித்து தடைகள் நீங்கி உதிக்க அருட்பாலித்தார். எனவே திருக்கழுக்குன்றத்திற்கு பாஸ்கரபுரி, தினகரபுரி, ஆதித்தியபுரி என்பன பெயராயிற்று. இதனைக் திருக்கழுக்குன்றத்து உலா, திருக்கழுக்குன்றபுராணம் முதலியவற்றால் அறியலாம்.சூரியன் வழிபட்ட ஆவினன்குடிஒரு சமயம் தேவர்கள் அனைவரும் கூடி திருக்கயிலாய மலையை அடைந்து சிவபெருமானைத் துதித்து நின்றனர். அப்போது மகதி என்ற யாழை ஏந்திய நாரதன் சூரியனை நோக்கி நீ ஒளிபரப்பாவிடில் உலக உயிர்கள் வருந்துமே என்றான். அதைக் கேட்ட சூரியன் அகங்காரம் கொண்டு அப்படித்தான் நான் ஒளிபரப்பவில்லை யென்றால் உலக உயிர்கள் அழியும் என்றான். இந்த அகங்காரத்தால் தன் கதிர்களை மறைத்துக்கொண்டு உலகத்தை இருளில் மூழ்கடித்தான். இதை அறிந்த சிவபெருமான் தனது கண்களை விழித்தார். இவ்வாறு நீண்ட காலம் கடந்தன. சூரியன் இல்லாமலேயே சிவனின் விழியின் ஔியினால் இந்த உலகம் செழிப்புடன் நடைபெற்றது. இதனை உணர்ந்த அவன் சிவபெருமானைப் பன்முறை வணங்கி ஆற்றாதவனாய் மண்ணுலகம் வந்து நெல்லி மரக்காட்டில்  சிவலிங்கம் அமைத்து தவம் செய்தான். அவனாலும் காமதேனுவாலும், திருமகளாலும்  போற்றப்பட்டதால் அப்பதி திரு+ ஆ+ இனன் குடி என்றாயிற்று. அதுவே பழனிமலையின்  அடிவாரத்தில் திருவாவினன்குடியாக இன்று விளங்கி வருகிறது….

The post சூரியதோஷம் போக்கும் சீர்மிகு தலங்கள் appeared first on Dinakaran.

Tags :
× RELATED ஒடிசாவுக்கு அளித்த வாக்குறுதிகள்...