×

ஆடி மாதத்தின் சிறப்பு!

பகவத் கைங்கர்ய, ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி A.M. ராஜகோபாலன்பூமாலையுடன் பாமாலையும் சூட்டிய சூடிக்கொடுத்த சுடர்கொடியாள்!திரு ஆடிப் பூரத்தில் செகத்துதித்து, அரங்கனையே ஆண்ட ஆண்டாள்!ஆடி : 02 ( 18.07.2021)  : சுக்கிரன், சிம்ம ராசிக்கு மாறுதல்.ஆடி : 03 ( 19.07.2021)  : புதன், கடக ராசிக்கு பிரவேசம்.ஆடி : 06 (22.07.2021)  : செவ்வாய், சிம்ம ராசிக்கு மாறுதல்.ஆடி : 20 (05.08.2021)  : புதன், சிம்ம ராசிக்கு மாறுதல்.ஆடி : 27 (12.08.2021)  : சுக்கிரன், கன்னி ராசிக்கு மாறுதல்.மாமுனிவர் அகத்தியரின் கருணையினால் தமிழக மக்களுக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷமான, கங்கையிலும் புனிதமாகிய அன்னை காவிரியை “ஆடிப்பெருக்கு”தினத்தன்று, புதுப் புடவை சமர்ப்பித்து, வளையல் சூட்டி, திலகமிட்டு, பூச்சூட்டி, மங்கலப் பாடல்கள் இசைத்து, தமிழக மக்கள் பூஜித்து, மகிழ்வதும் இந்த ஆடி மாதத்தில்தான்!ஆழ்ந்த அறிவு, கிரகிப்பு சக்தி சிந்தனைத் திறன், பிறவி சுபாவம் (இயற்கை குணம்), தாயின் மீது பக்தி, மனபலம் ஆகியவற்றைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டுள்ள சந்திரனின் ராசியான கடகத்தில் சூரியன் சஞ்சரிக்கும் காலத்தையே “ஆடி” மாதம் எனப் போற்றுகின்றோம்!அமுதம் வேண்டி, தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, அவதரித்தவரே அழகிலும், அறிவிலும் உயர்ந்தவரான சந்திரன்! ஒருவருடைய வாழ்க்கை, வளம்பெற எவ்விதம் உடல்நலன் அவசியமோ, அந்த அளவிற்கு மன நலனும் அதிமுக்கியமானதாகும். அந்த மன நலனை நமக்கு அளித்தருள்பவர் சந்திரனே! நமது உடலின் மூளைப் பகுதியும், அதிலுள்ள நரம்பு மண்டலமும் சந்திரனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவையே. ஆதலால், ஜோதிடக்கலை சந்திரனை “மனோகாரகர்” எனப் புகழாரம் சூட்டுகிறது.மேலும், குழந்தைகளுக்கு எந்த அளவிற்கு தாயன்பு, பாசம், தாயுடன் நல்ல உறவு ஆகியவற்றையும் சந்திரனே நிர்ணயிப்பதால். அவரை “மாத்ரு காரகர்” எனவும் பூஜிக்கிறது, ஜோதிடம். வாழ்க்கையில் வெற்றிபெற்று, சமூகத்தில் கௌரவத்துடன் வாழ, ஜாதகத்தில் சந்திரன் சுபபலம் பெற்றிருக்க வேண்டும். சந்திரன் சுபபலம் பெற்றிருக்கும்போது பிறப்பவர்களுக்கு, அவர்களது அறிவுத் திறனே அவர்களது வெற்றிக்குத் துணை நிற்கும் எனக் கூறுகிறார், தனது திறமை ஒன்றினாலேயே நவநந்தர்களைத் தோற்கடித்து, சந்திரகுப்த மௌர்யரை அரியணையில் அமர்த்தி, வெற்றி கண்ட சாணக்கியர்!திருமணப் பொருத்தத்தில் சந்திரன்!திருமணப் பொருத்தத்தில் சந்திரன் நின்ற லக்கினம் மிக மிக முக்கிய பொறுப்பை வகிக்கிறது. ஜென்ம லக்கினத்துடன்கூட, சந்திரன் நின்ற ராசி ரீதியிலும் பொருத்தம் பார்க்க வேண்டியது மிகவும் அவசியம். ஜென்ம லக்கினத்தை வைத்து, கணவர்  மனைவியரிடையே உடல் ரீதியான குறைபாடுகளை  குணங்களை மட்டுமே கண்டுபிடிக்க இயலும். ஆனால், மனோரீதியில் பரஸ்பர ஈர்ப்பும், அன்னியோன்யமும் நிலைத்திருக்குமா? என்பதை மணமக்களின் சந்திரா லக்கினங்களை வைத்தே நிர்ணயிக்க முடியும்! இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம், ஜாதகங்களில் மனோகாரகரான சந்திரனின் நிலை எவ்வளவு முக்கியம் என்பதை!சந்திர தோஷத்திற்கு பரிகாரங்கள்!ஜெனன கால ஜாதகத்தில் சந்திரன், அவரது நீச்ச (பலம் குறைந்த) ராசியான விருச்சிகத்தில் இருந்தாலும், லக்கினத்திலிருந்து 6, 8ம் இடங் களில் இருந்தாலும், பரிகாரம் செய்துகொள்ள வேண்டும். சந்திர தோஷத்தினால், எதையும் புரிந்துகொள்ளும் சக்தி பாதிக்கப்படும். மனோவியாதிகள் ஏற்படக்கூடும். மூளையைச் சுற்றியுள்ள நரம்பு மண்டல சம்பந்தமான பாதிப்புகளால் வருந்த நேரிடும். வீர்யம் வாய்ந்த செவ்வாய், ராகுவுடன் சந்திரன் சேர்ந்திருந்தால் (ஜெனன காலத்தில்) முன்கோபம், பிடிவாதம், “தான்” என்ற ஆணவம், பிறரைத் தூக்கி எறிந்து பேசுவது போன்ற துர்க்குணங்கள் ஏற்படும் என “பிருகத் ஜாதகம்” என்ற பண்டைய நூல்கள் கூறுகின்றன.கேதுவுடன் சந்திரன் சேர்ந்திருந்தால்,  உலக வாழ்க்கையில் பற்றற்ற மனோபாவம் உண்டாகும். சப்தம ஸ்தானமாகிய களத்திர, காமஸ்தானத்தில் (லக்கினத்திலிருந்து 7ம் இடம்), உச்ச பலம் கொண்ட சுக்கிரன் அல்லது ராகுவுடன் சந்திரன் சேர்ந்திருந்தால், ஒழுக்கமற்று மனைவிக்கு துரோகம் செய்பவனாக இருப்பான் எனவும் ஜோதிட நூல்கள் விளக்குகின்றன. ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைந்திருந்தால், ஸ்வர்ணத்தில் (தங்கம்) ஒரேயொரு முத்துப் பதித்த மோதிரம் அணிந்தால் தோஷம் விலகும்.திங்களூர்!கும்பகோணம்  திருவையாறு மார்க்கத்தில் திகழும், பாடல்பெற்ற திருத்தலமான திங்களூர் சென்று, சந்திர புஷ்கரணியில் நீராடி, நெய்தீபம் ஏற்றிவைத்து, ஸ்ரீபெரிய நாயகி ஸமேத ஸ்ரீ கைலாஸ நாதரையும், சந்திரனையும் தரிசித்துவிட்டு வந்தால் தோஷம் நீங்கும். அளவற்ற சக்திவாய்ந்த, சந்திரதோஷ நிவாரணத் திருத்தலம் இது. மிகப் புராதனமானது. மனச் சபலங்களைப் போக்கி, திடபுத்தியை அளிக்கும்.சோம்நாத்!குஜராத் மாநிலத்திலுள்ள, சரித்திரப் பிரசித்திப் பெற்ற சோம் நாத் ஆலய தரிசனம், வேத காலத்திலிருந்தே பூஜிக்கப்பட்டுவரும் சந்திர தோஷ பரிகாரத் தலமாகும்.சோமங்கலம்!சென்னையையடுத்த ஸ்ரீ காமாட்சி அம்பிகை ஸமேத ஸ்ரீ சோமநாதீஸ்வரர் திருக்கோயில் சக்திவாய்ந்த சந்திர தோஷத்திலிருந்து விடுவிக்கும் தலமாகும். சோழர் மன்னர்கள் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டது.ஆடி மாதத்தின் தெய்வீகம்!ஆடி மாதத்தை, “அம்பிகையின் மாதம்”  எனக் கூறுவர், பெரியோர்கள். தமிழகத்தின் சரித்திரத்தை ஆராய்ந்து பார்த்தால், சிறு கிராமங்களில்கூட, ஆடி மாதத்தில் மாரியம்மனுக்கு விழா எடுக்கும் பழக்கம், தொன்றுதொட்டு இருந்து வருவது தெரியும். ஆடி வெள்ளிக் கிழமைகளில் ஸ்ரீமகாலட்சுமி, துர்கை, சரஸ்வதி ஆகிய அன்னையருக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து பூஜிப்பது வறுமையைப் போக்கும் என்பதைப் பழமையான பரிகார நூல்கள் கூறுகின்றன. அம்பிகை ஸ்ரீபார்வதியே ஆடி மாதத்தில் விரதம், தவம் இருந்து, அதன் பலனாக ஸ்ரீபரமேஸ்வரனையே பதியாக அடைந்தார்கள் என புராணங்கள் கூறுகின்றன (சங்கரன் கோயிலின் பிரசித்திப்பெற்ற ஸ்ரீகோமதி அம்பிகையின் “ஆடி தபசு”  உற்சவத்தின் பெருமை அனைவரும் அறிந்ததே!) கேரள மாநிலத்தில் ஆடி மாதத்தை “ராமாயண மாதம்” எனக் கொண்டாடுகிறார்கள்.ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த ஆடி மாதம்!“மானிடருக்கென்று பேச்சுப்படில், வாழகில்லேன் கண்டாய், மன்மதனே!” அதாவது, மானிடருக்கு என்னைத் திருமணம் செய்து கொடுப்பதாகப் பேசினால்கூட, நான் உயிர் தரியேன்…!” எனக் கூறி, தன் ஈடிணையற்ற பக்தியினால், அரங்கத்து இன்னமுதனை அடைந்த ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்ததும், ஆடிப்பூரத் திருவிழா ஆண்டாளின் திருவிழாவாயிற்று, இந்தப் புண்ணிய ஆடி மாதத்தில்! இத்தகைய பெருமையும், தெய்வீகமும் பொருந்திய இந்த ஆடி மாத ராசி பலன்களை “தினகரன்” வாசக அன்பர்களின் நன்மைகள் கருதி, அளிப்பதில் அளவற்ற மனநிறைவு பெறுகிறோம்….

The post ஆடி மாதத்தின் சிறப்பு! appeared first on Dinakaran.

Tags : Audi ,Sutargodya ,Rajagobalanbum ,Adib ,Puram ,
× RELATED ஐபிஎல் டி20-யில் இன்று 2 போட்டி:...