×

கவலையை தீர்ப்பாய் ஸ்ரீமன் நாராயணா…

பிருமம் ஸ்ரீ சேங்காலிபுரம் ஸ்ரீ அனந்தராம தீதர்இந்த ஸ்ரீ குருவாதபுரீச பஞ்சரத்ன ஸ்தோத்திரம் ஜெயத்தை கொடுக்கக் கூடியதும். சந்தோஷத்தையும், நாம் விரும்பும் நல்ல செயல்களை முடித்துக் கொடுப்பதும், நம்முடைய மனக் கஷ்டத்தை போக்கக் கூடியதாகும். இந்த ஸ்தோத்திரத்தை அருளியவர் சிறந்த கவியான பிரம்ம ஸ்ரீ சேங்காலிபுரம்  ஸ்ரீ அனந்தராம தீக்ஷ்தராகும். ஆன்மிக பலன் வாசகர்களுக்காக தமிழ் அர்த்தத்துடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தினமும் காலை-மாலை இந்த மந்திரத்தை நாம் படித்தால் ஸ்ரீ குருவாயூரப்பன் அருள் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.*கல்யாணரூபாய கலௌ ஐனானாம்கல்யாணதாத்ரே கருணாஸ்தாப்தேகம்ப்வாதி திவ்யாயுத ஸத்கராயவாதாலயாதீச நமோ நமஸ்தேநாராயண நாராயண நாராயண நாராயணநாராயண நாராயண நாராயண நாராயணநாராயண நாராயண நாராயண நாராயணநாராயண நாராயண நாராயண நாராயணகலியுகத்தில் மக்களுக்கு எல்லா செல்வத்தையும் அளிப்பவரும் மங்கள ரூபியும் கருணைக் கடலானவரும் சங்க முதலான திவ்ய ஆயுதங்களைத் தரித்த திருக்கரங்களை உடையவருமான ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு நமஸ்காரம்.*நாராயணேத்யாதி ஐபத்பிருச்சைபக்தைஸ்ஸதா பூர்ண மஹாலாய ஸ்வதீர்த்த காங்கோபம வாரிமக்னநிவர்த்திதாசேஷருஜே நமஸ்தே நாராயண நாராயண நாராயண நாராயணநாராயண நாராயண நாராயண நாராயணநாராயண நாராயண நாராயண நாராயணநாராயண நாராயண நாராயண நாராயணநாராயணா முதலான திருநாமங்களைப் பக்தர்கள் எங்கு உரக்க சொல்கிறார்களோ அந்த ஆலயத்தையும், புனித நீர் கங்கைக்குச் சமமான எந்த தீர்த்தத்தில் நீராடும் பக்தர்களின் துன்பங்கள் நீக்கப்படுகின்றனவோ அந்த தீர்த்தத்தை உடையவருமான பலர் குருவாயூரப்பனுக்கு நமஸ்காரம்.*பிராஹ்மே முகூர்த்தே பரித ஸ்வபத்தைஸந்த்ருஷ்ட ஸர்வோத்தம விச்சருப ஸ்வதைல ஸம்ஸேவக ரோக ஹர்தரேவாதாலயாதீச நமோ நமஸ்தேநாராயண நாராயண நாராயண நாராயணநாராயண நாராயண நாராயண நாராயணநாராயண நாராயண நாராயண நாராயணநாராயண நாராயண நாராயண நாராயண எந்த பகவானின் உத்தமமான விஸ்வரூபம்  பக்தர்களால் பிரம்ம முகூர்த்தத்தில் தரிசனம் செய்யப்படுகிறதோ, எந்த பகவானை அபிஷேக தைலத்தால் தரிசனம் செய்து அதை அருந்தி பக்தர்கள் துன்பத்திலிருந்து விடுவிக்கப்படுகிறார்களோ அந்த ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு நமஸ்காரம்.*பாலான் ஸ்வகீயான் தவ ஸன்னிதானேதிவ்யான்னதானாத் பரிபாலயத்பி ஸதாபடத் பிச்ச புராணரத்னம்ஸம்ேஸவிதாயாஸ்து நமோ ஹரே தேநாராயண நாராயண நாராயண நாராயணநாராயண நாராயண நாராயண நாராயணநாராயண நாராயண நாராயண நாராயணநாராயண நாராயண நாராயண நாராயணகுருவாயூரப்பா உந்தன் சன்னிதியில் குழந்தைகளுக்கு அன்னப்ராசனம் செய்து மகிழும் பக்தர்களாலும், எப்போதும் புராணரத்தினமான ஸ்ரீ மத் பாகவத்தைப் படிக்கும் பக்தர்களாலும் வணங்கப்படும் ஸ்ரீ ஹரியான தங்களுக்கு நமஸ்காரம்.*நித்யான்னதாத்ரே மஹீஸூரேப்யநித்யம் திவிஸ்தைர்நிசி பூஜிதாயமாத்ரா சபித்ரா சதோத்தவேனஸம்பூஜிதாயாஸ்து நமோ நமஸ்தே நாராயண நாராயண நாராயண நாராயணநாராயண நாராயண நாராயண நாராயணநாராயண நாராயண நாராயண நாராயணநாராயண நாராயண நாராயண நாராயணதினம் உங்தன் சன்னிதியில் வேதவிற்பன்னர்களுக்கு அன்னதானம் அளிப்பவரும் தேவர்களால் தினமும் இரவில் பூஜை செய்யப்படுவரும் பெற்றோராலும், உற்ற நண்பரான உத்தவராலும் பூஜை செய்யப்பட்ட வருமான தங்களுக்கு நமஸ்காரம்.*அனந்தராமாக்ய கிப்ரணீகம்ஸ்தோத்ரம் படேத்யஸ்து நரஸ்த்ரி காலம்வாதால யோஸ்ய க்ருபாபலேனலபேத ஸர்வாணி சமங்களாநிநாராயண நாராயண நாராயண நாராயணநாராயண நாராயண நாராயண நாராயணநாராயண நாராயண நாராயண நாராயணநாராயண நாராயண நாராயண நாராயணபிருமம் ஸ்ரீ சேங்காலிபுரம் ஸ்ரீ அனந்தராம  தீதரால்  இயற்றப்பட்ட இந்த (மந்திரத்தை) தினமும் காலையிலும், மாலையிலும் படிப்பவர் எல்லோரும் ஸ்ரீ குருவாயூரப்பனின் கருணையும் அருளும் மற்று செல்வங்களும் பெறுவர்.*குருவாதபுரீச  பஞ்சகாக்யம்ஸ்துதிரத்னம் படதாம் ஸீமங்கலம் ஸ்யாத்ஹிருதிசாபி விசேத் ஹரிஸ்வயம் துரதி நாதாயுத துல்யதேஹ காந்திநாராயண நாராயண நாராயண நாராயணநாராயண நாராயண நாராயண நாராயணநாராயண நாராயண நாராயண நாராயணநாராயண நாராயண நாராயண நாராயணஇந்த குருவாதபுரீச பஞ்சரத்னம் ஸ்தோத்திரத்தைப் படிப்பவருக்கு எப்போதும் மங்களம் உண்டாகும். ரதியின் பதியான மன்மதனை ஒத்த தேக ஒளியைப் பெற்று ஸ்ரீ ஹரியின் இதயத்திலும் இடம் பெறுவர். (அருள் பெருகும்…)குடந்தை நடேசன்…

The post கவலையை தீர்ப்பாய் ஸ்ரீமன் நாராயணா… appeared first on Dinakaran.

Tags : Sriman Narayana Bhirumam ,Sri Chengalipuram ,Sri Anantharama Dedar ,Shri ,Guruvadapurisa ,Sreman Narayana ,
× RELATED சொல்லிட்டாங்க…