×

திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூ, கொமதேக, மமக, தவாகவுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு: மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கு வருகிற 6ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலை சந்திக்கும் வகையில் திமுக தீவிரமாக களம் இறங்கியுள்ளது.இதனைதொடர்ந்து இந்த கட்சிகளுக்கு என்னென்ன தொகுதிகளை ஒதுக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. மதிமுக: மதுராந்தகம், வாசுதேவநல்லூர், சாத்தூர், அரியலூர், மதுரை தெற்கு, பல்லடம் தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்: கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் ெதாகுதிகள். அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு உசிலம்பட்டி தொகுதியும், மக்கள் விடுதலை கட்சிக்கு நிலக்கோட்டை(தனி) தொகுதி, ஆதித்தமிழர் பேரவைக்கு அவினாசி தொகுதியும் ஒதுக்கப்பட்டது.இந்த நிலையில் திமுக- காங் தொகுதி பங்கீட்டு குழுவில் உடன்பாடு ஏற்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் கையெழுத்திட்டனர். அந்த ஒப்பந்தத்தில் கூறியிருப்பதாவது: சட்டமன்ற பொதுத் தேர்தலில், திமுக-தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும், மற்ற தோழமை கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக இன்று(நேற்று) தொகுதிகள் உடன்பாடுகள் குறித்து திமுகவும், தமிழக காங்கிரஸ் கட்சியும் கட்சியும் கலந்து பேசியதில் திமுக கூட்டணியில்- காங்கிரஸ் கட்சியும் கலந்து பேசியதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு சட்டமன்ற தேர்தலில் பொன்னேரி(தனி), திருபெரும்புதூர்(தனி), சோளிங்கர், ஊத்தங்கரை(தனி), ஓமலூர், உதகமண்டலம், கோவை(தெற்கு), காரைக்குடி, மேலூர், சிவகாசி, திருவைகுண்டம், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், ஈரோடு கிழக்கு, தென்காசி, அறந்தாங்கி, விருத்தாச்சலம், நாங்குநேரி, கள்ளக்குறிச்சி(தனி), திருவில்லிபுத்தூர்(தனி), திருவாடனை, உடுமலைப்பேட்டை, மயிலாடுதுறை, வேளச்சேரி ஆகிய 25 தொகுதிகளில் போட்டியிடுவதென தீர்மானிக்கப்பட்டது.ஒப்பந்தத்திற்கு பிறகு கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டி: காங்கிரஸ் கட்சியின் சார்பாக மதசார்பற்ற கூட்டணியின் தமிழக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ காங்கிரஸ் நன்றியை  தெரிவித்து கொள்கிறது. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக திமுக தொகுதி பங்கீட்டு குழுவினர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் ஆகியோர் கையெழுத்திட்டனர். அந்த ஒப்பந்தத்தில் கூறியிருப்பதாவது: திமுக கூட்டணியில்-இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பவானிசாகர்(தனி), திருப்பூர் வடக்கு, வால்பாறை(தனி), சிவகங்கை, திருத்துறைப்பூண்டி(தனி), தளி ஆகிய 6 தொகுதிளில் போட்டியிடுவதென தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். தொடர்ந்து ஜவாஹிருல்லா அளித்த பேட்டியில், ‘‘ தமிழக மக்களின் நலனுக்காக, மக்கள் இழந்து வரக்கூடிய உரிமைகளை மீட்பதற்காக சமூக நீதியினுடைய தொட்டில் தான் தமிழ்நாடு என்பதை தொடர்ந்து நிலைநாட்ட நல்லது ஒரு தீர்ப்பை தருவார்கள்’’ என்றார். தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் கையெழுத்திட்டனர். அதன் பிறகு  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்பட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்நிலையில் மதச்சார்பின்மை வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காக ஒரு முடிவை எடுத்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கட்சிகளுக்கு 5 அம்ச கோரிக்கைகளுடன் ஆதரவு அளிப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கூறினார்….

The post திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூ, கொமதேக, மமக, தவாகவுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு: மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்து appeared first on Dinakaran.

Tags : Congress ,Indian Gammu ,Komadega ,Mamaka ,Dawawaga ,Dishagam Alliance ,G.K. ,Stalin ,Chennai ,Tamil Nadu ,Indian Kamu ,Dawagau ,Dizhagam Alliance ,B.C. G.K. ,Dinakaran ,
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு...