×

தமிழுக்கு செம்மொழி தகுதி வழங்கியதில் வியப்பில்லை: குடியரசு தலைவர் புகழாரம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் 41வது பட்டமளிப்பு விழா சென்னையில் நேற்று நடந்தது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் நீடிப்பதை தொடர்ந்து நேற்றைய பட்டமளிப்பு விழாவில் 69 பேருக்கு மட்டுமே குடியரசுத் தலைவர் பட்டங்களை வழங்கி சிறப்பித்தார். அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த 1 லட்சத்து 4 ஆயிரத்து 75 மாணவ, மாணவியர் பட்டம் பெற்றனர். இவர்களில் இளநிலை பட்டங்கள் 85,247, முதுநிலைப் பட்டம் 16,777, முனைவர் பட்டம் 2051 பேர் பெற்றுள்ளனர். மேலும், தங்கப்பதக்கம் பெற்றவர்கள் 69 பேர். அவர்களில் 42 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாணவ, மாணவியரை பொறுத்தவரையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப வளாக கல்லூரி, கட்டிடக் கலை மற்றும் திட்டமிடுதல் பள்ளி வளாகம், எம்ஐடி, இணைப்பு பெற்ற கல்லூரிகள் என மொத்தம் 550 கல்லூரிகளை சேர்ந்தவர்கள் பட்டம் பெற்றுள்ளனர். மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசும்போது, தனது உரையை முதலில் தமிழில் தொடங்கினார்.  பின்னர், அவர் ஆங்கிலத்தில் உரையாற்றியதாவது: அண்ணா பல்கலைக்கழகம் அமைந்துள்ள தமிழ்நாடு பழங்காலம் முதல் அறிவாற்றல் மற்றும் கற்றலில் தலைசிறந்து விளங்கி வருகிறது. சங்க இலக்கியம் முதற்கொண்டு பல நூற்றாண்டு கால இலக்கிய பாரம்பரியம் கொண்டது. தமிழ் இலக்கியத்தில் உள்ள பாடங்களின் தொகுப்புகள், உலக மக்களால் பாராட்டப்படுகின்றன. பண்டைக்கால இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள உரையின் தொன்மையை பார்த்தால் தமிழ்மொழிக்கு செம்மொழி தகுதி வழங்கியதில் வியப்பு ஏதும் இல்லை. கல்வி அறிவுதான் நமது சொத்து; இதுவே அனைத்து சொத்துகளிலும் தலை சிறந்தது. இதை யாரும் எடுத்துக்கொள்ள முடியாது. ஒவ்வொருவரின் தனிப் பண்புகளை உருவாக்குவதில் அறிவாற்றல்தான் அடித்தளமாக இருக்கிறது. சமூக மாற்றத்துக்கான கிரியாவூக்கி கல்விதான்.அதனால் படித்த இளைஞர்களுக்கு சரியான பாதையை காட்டினால் அவர்களால் நாட்டின் வரலாற்றில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும். இந்த அண்ணா பல்கலைக்கழகம் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இருக்கிறது என்றார்….

The post தமிழுக்கு செம்மொழி தகுதி வழங்கியதில் வியப்பில்லை: குடியரசு தலைவர் புகழாரம் appeared first on Dinakaran.

Tags : President ,Pukhazaram ,Chennai ,convocation ceremony ,Anna University ,Ram Nath Kovind ,
× RELATED முதல்வர் புகழாரம் திராவிட பேரொளி அயோத்திதாச பண்டிதர்