×

பூரம்

‘‘மகத்தில் மங்கை பூரத்தில் புருஷன்’’ என்பார்கள். பொதுவாக பூரத்தில் ஆண் பிள்ளைகள் பிறந்தால் கூடுதல் அதிர்ஷ்டம் நிச்சயம் உண்டு. சூரியனின் ராசியான சிம்மமும், சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட பூர நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால் நெருப்பில் பூத்த பூவாக மணம் வீசுவீர்கள். பெரிய அளவில் ஜெயித்தால் கூட கர்வமில்லாமல் இருப்பீர்கள். பேச்சில் நயமும், அதில் அறிவுச் சாரலும் எப்போதும் மிகுந்திருக்கும். வாழ்வின் ஆரம்பத்தில் பெரிய குறிக்கோள்கள் எதுவுமிருக்காது. சாதாரணமாகத்தான் இருப்பீர்கள். ஆனால், திடீரென்று முன்னேற ஆசைப்படுவீர்கள். எப்போதுமே கெடுபிடிகள் அதிகமிருந்தால் விலகுவீர்கள். கிராமத்து வாழ்வின் மெல்லிய அமைதி எப்போதும் பிடிக்கும். எல்லா விஷயத்திற்கும் நேரம் எடுத்துக் கொண்டு வேலை செய்வீர்கள். அதிகாரத்தை கையில் கொடுத்தால் ஆணவமாகவும், அக்கிரமமாகவும் எதுவும் செய்ய மாட்டீர்கள். நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரனாக வருவதால் காண்போரை கவர்ந்திழுக்கும் வசீகரம் அதிகமிருக்கும். சிறிய வயதில் துடுக்குச் சுக்கிரனாக இவர்களிடத்தில் சுக்கிரன் செயல்படுவார். பெரியவர்களை கூட பெயர் சொல்லி அழைப்பீர்கள். மிமிக்ரி செய்வீர்கள். தந்தையாரின் அந்தஸ்து ஏறுமுகமாகவே இருக்கும். சொந்தக்காரர்கள் உங்களை சுட்டி காட்டிப் பேசுவார்கள். உங்களைச் சுற்றி ஒருவித பிரமிப்பை உருவாக்குவீர்கள். எப்படியேனும் கலைத்துறையில் அங்கீகாரம் பெற வேண்டுமென்று அலைவீர்கள். ஷேர் மார்க்கெட், வெளிநாட்டு வியாபாரத் தொடர்புகள் என்று உங்களின் எல்லையை விஸ்தரிப்பீர்கள். அசுரத்தனமாக வேலை செய்வீர்கள். இயக்கம், சங்கம், நாடாளுபவர்களுக்கு நட்பு என்று உங்கள் ரேட்டிங் எகிறும். அப்படியே சனி தசையிலும் எல்லா நல்லவையும் தொடரும். பொதுவாகவே பூர நட்சத்திரக்காரர்கள் பக்தித் தலங்களுக்கு சென்றாலும், சுகமான சூழலில் கோயில் அமையப்பெற்று, இறைச்சந்நதியின் சாந்நித்தியம் இவர்களை நிறைக்கும்போது இவர்களுக்குள் ஒரு பெரிய மாற்றம் உருவாகிறது. அவர்களின் இயல்பான இயற்கை நிலையை அத்தலங்கள் உருவாக்கி விடுகின்றன. அப்படிப்பட்ட திருத்தலமே குற்றாலம். அருவியின் அடியில் ஆலயம் அமைந்திருக்கிறது. அதுமட்டுமல்லாது குரு என்கிற அகத்தியர் பாதம் பட்டிருப்பதும் விசேஷ அம்சமாகும். …

The post பூரம் appeared first on Dinakaran.

Tags : Puram ,Purusha ,Purum ,
× RELATED புருஷாமிருகம்