×

வேட்பாளர் பட்டியலில் ஒருவருக்கு கூட வாய்ப்பு இல்லை தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு ‘அல்வா’ கொடுத்த அதிமுக தலைமை: கடும் அதிருப்தியில் நிர்வாகிகள்

அதிமுக கட்சிக்கு என்று தகவல் தொழில்நுட்ப பிரிவு செயல்பட்டு வருகிறது. இதற்காக மண்டலம், மாவட்டம் ஒன்றிய, நகரம் வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அதிமுக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப், டெலிகிராம், இன்ஸ்ட்கிராம் போன்ற சமூக வலைதளங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மண்டலம் வாரியாகவும் அலுவலகங்கள் திறக்கப்பட்டு அங்கு தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர்களை பணியில் அமர்த்தி அரசின் திட்டங்களை பொதுமக்களின் மத்தியில் கொண்டு சென்று வருகின்றனர். கட்சி சார்பில் நிதியுதவி இல்லாமல் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் சொந்த செலவில் செய்து வருகின்றனர். பல்வேறு விதவிதமான கருத்துகளையும், மக்களை கவரும் வகையில் சில டிஜிட்டல் முறையில் பிரசாரமும் மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக கட்சி நிர்வாகிகள் மத்தியில் இந்த பிரிவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. அதற்காக 171 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை 2வது கட்டமாக நேற்றுமுன்தினம் வெளியிட்டது. அதில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த ஒருவர் கூட வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்பதால் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ‘‘தமிழகம் முழுவதும் தகவல் தொழில்நுட்ப பிரிவில் உள்ள ஒரு நபருக்கு கூட சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட அதிமுக தலைமை வாய்ப்பு வழங்கவில்லை. பகல், இரவு என்று பாராமல் கட்சிக்காக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். ஆனால் கட்சி தலைமை எங்களை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் கட்சியின் செயல்பாடுகள் அனைத்தும் சமூக வலைதளங்கள் மூலம்தான் பரவுகிறது. இதை கட்சி தலைமை புரிந்து கொள்ளாமல் எங்களை புறக்கணித்து உள்ளது. இது எங்களுக்கு மிகுந்த வருத்தமாக உள்ளது. பல கோடிகள் செலவு செய்து நியமனம் செய்து உள்ள அரசியல் ஆலோசகர் சுனில் தலைமையிலான டீம் கூட எங்களை போல கட்சி பணியை மேற்கொள்ளவில்லை. இனி தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மற்றும் நிர்வாகிகள் கூட வர மறுப்பார்கள். அந்த அணிக்கு வந்தால் எந்த பலனும் கிடையாது. அது ஒரு டம்மியான அணி என்ற முத்திரையை தற்போதைய அதிமுக தலைமை குத்தியுள்ளது. எங்கள் தகவல் தொழில்நுட்ப பிரிவில் திறமையான வேட்பாளர் இல்லை என்பதை போன்றே எங்களை முற்றிலுமாக புறக்கணித்துள்ளனர். அதை உடனே நிவர்த்தி செய்யும் வகையில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் உள்ள முக்கிய நிர்வாகிகளை வேட்பாளராக அறிவிக்க வேண்டும்’’ என்று குமுறலை வெளிப்படுத்தி உள்ளனர்.* ‘செல்லூர் ராஜுவுக்கு தகுதி தேர்வு வைங்கப்பா..!’நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அரக்கோணத்தில் பேசியதாவது:- மருத்துவ மாணவர்களுக்கு நீட் தேர்வு வைப்பது போல் வேட்பாளர்களுக்கும் தகுதி தேர்வு வைக்க வேண்டும். அப்படி வைத்தால் செல்லூர் ராஜு போன்ற அமைச்சர்கள் வர முடியுமா? முடியாது. இந்தியாவில் மருத்துவம் மிகப் பெரிய வியாபாரமாக மாறி உள்ளது. தண்ணீர் மிகப் பெரிய சந்தை பொருளாக உள்ளது. எவை எல்லாம் அடிப்படையோ, எவை எல்லாம் அவசியமோ, அவை எல்லாம் இன்று முதலாளிகளின் லாபம் ஈட்டும் தொழிலாக மாறி உள்ளது. தற்போது கூட டெல்லியில் 110 நாட்களாக விவசாயிகள் போராடுவது விவசாயிகளுக்கான போராட்டம் மட்டும் அல்ல 130 கோடி மக்களுக்கான போராட்டம். அதற்கு நாம் தமிழர் கட்சியும் ஆதரவு அளித்து வருகிறது. போராடும் விவசாயிகளை மதிக்காதது இந்த அரசு. விவசாயி சாவு இன்று செய்தி. ஆனால் அது நாளை நாம் உணவு இன்றி சாகப் போகின்றோம் என்பதற்கான முன் அறிவிப்பு. 11ஜி வரை செல்போன் வந்தாலும் கஞ்சி விவசாயி தான் உற்ற வேண்டும். இதை உணர்ந்து மக்கள் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்….

The post வேட்பாளர் பட்டியலில் ஒருவருக்கு கூட வாய்ப்பு இல்லை தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு ‘அல்வா’ கொடுத்த அதிமுக தலைமை: கடும் அதிருப்தியில் நிர்வாகிகள் appeared first on Dinakaran.

Tags : Alva ,Dinakaran ,
× RELATED வல்லவன் வகுத்ததடா விமர்சனம்