×

தேமுதிக எங்கிருந்தாலும் வாழ்க: அமைச்சர் க.பாண்டியராஜன் கலகல

கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதால், அதிமுக அதிக தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், ‘‘தேமுதிக எங்கு இருந்தாலும் வாழ்க’’ என வாழ்த்தி ஆவடி தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான பாண்டியராஜன் பேசினார். ஆவடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தற்போதைய எம்.எல்.ஏவும், அமைச்சருமான பாண்டியராஜன் மீண்டும் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று காலை ஆவடி அருகே திருமுல்லைவாயலில் உள்ள பச்சையம்மன், சிவன் உள்ளிட்ட கோயில்களில் சாமி தரிசனம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். அப்போது, அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூட்டணியிலிருந்து தேமுதிக விலகி உள்ளதால், இதுவரை போட்டியிட்டதை விட, அதிமுக அதிக தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களது வலிமை என்ன என்பதை அறிந்து நாங்கள் ‘சீட்’ வழங்கினோம். அதை ஏற்காமல், அவர்கள் வேறு பாதையை தேடி சென்றுள்ளனர். தேமுதிக ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று சொல்ல விரும்புகிறேன். தேமுதிக, அவர்கள் பாதையில் போகட்டும். நாங்கள் எங்கள் பாதையில் செல்கிறோம். தேமுதிகவை விட மிக, மிக வலிமையான பாஜ, பாமக ஆகிய கட்சிகள் எங்கள் கூட்டணியில் உள்ளது. த.மா.கா கட்சியும் எங்களுடன் இருக்கும் என நம்புகிறோம். மேலும், எங்கள் கூட்டணிக்கு 300 கட்சிகளுக்கு மேல் ஆதரவு அளித்துள்ளது. எனவே, அதிமுக கூட்டணி நல்ல கூட்டணி, வலிமையான கூட்டணி, மக்கள் நேசம் பெற்ற கூட்டணி என்றார். * மநீம வேட்பாளர் யாரென்றே எனக்கு தெரியாது: மாவட்ட தலைவர் லகலகதிருப்போரூர் சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக லாவண்யா அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை பற்றி தகவல் சேகரிக்க காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் ராஜீவ் என்பவரை தொடர்பு கொண்டபோது, ‘இப்படி ஒரு வேட்பாளர் அறிவிக்கப்பட்டதே எனக்கு தெரியாது. அவர் யாரென்றும் எனக்கு தெரியாது. என்னை எதுவும் கேட்க வேண்டாம்’ என்று கூறி விட்டார். திருப்போரூர் ஒன்றிய, நகர நிர்வாகிகளை தொடர்பு கொண்டு கேட்டபோதும், ‘லாவண்யா யார் என்றே தெரியாது, அவருடைய புகைப்படம் கூட தங்களிடம் இல்லை’ என்றனர். தொடக்கமே சரியில்லாத நிலைக்கு மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் தள்ளப்பட்டுள்ளது அவரது கட்சியினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது….

The post தேமுதிக எங்கிருந்தாலும் வாழ்க: அமைச்சர் க.பாண்டியராஜன் கலகல appeared first on Dinakaran.

Tags : Demudika ,Minister K. Pandiyarajan Kalakala ,DMD ,AIADMK ,Minister K. Pandiyarajan Kalagala ,Dinakaran ,
× RELATED வரும் 9ம் தேதி விஜயகாந்திற்கு...