×

காரிய சித்தி மந்திரங்கள்

அஷ்டம சனி  தோஷம்  விலக :பொதுவாகவே ஜாதகத்தில் சனி பகவான் நமது ராசிக்கு எட்டில் வரும்போது பல துன்பங்களை கொடுத்து எட்டி எட்டி உதைப்பார். அப்படிப்பட்ட துன்பங்களிருந்து விடுபட நாம் கெட்டியாக சனி பகவானை நாம் வழிபட வேண்டும்.1. ஓம் காக த்வஜாய வித்மஹேகட்க ஹஸ்தாய தீமஹிதந்னோமந்த ப்ரசோதயாத்உடலும் உள்ளமும் தூய்மை பெற :நமது உடலும் உள்ளமும்  நாம் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். உடலும் உள்ளமும் தூய்மை இல்லாமல் இருந்ததால் எந்த ஒரு  செயலும் வெற்றி அடைய முடியாது. உடலும் உள்ளமும் தூய்மை பெற நாம் அன்றாடம் துளசியை வழிபடுதல் வேண்டும். இல்லத்தில் துளசி மாடம் இருத்தல் நல்லது.2.யாத்ருஷ்டா நிகிலாக ஸங்கசமனீஸ்ப்ருஷ்டா வபு பாவனீரோகணா மபிவந்திதா நிரஸனீஸிக் தாந்தக த்ராஸினீவெற்றி அடைய :நாம் வாழ்க்கையில் செய்யும் செயல்களில் வெற்றி பெற வேண்டுமானால் முருகப் பெருமானை வழிபட வேண்டும்.3. ‘‘ஓம் ச்ரீம் ஹ்ரீம், வ்ரீம்ஸெனம் சரவண பவ’’எதிரிகளை வெல்ல :நமக்கு பல வகையில் தெரிந்தோ தெரியாமலோ பகையும், பகைவர்களும் இருக்கின்றனர். அந்த பகையை நாம் வென்றிட ஸ்ரீப்ரத்யங்கிரா தேவியை  நாம் வழிபட வேண்டும்.4. ஓம் ஷம் பஷ ஜ்வாலா ஜிஹ்வேகராளதம்ஷ்ட்ரேப்ரத்யங்கிரே க்ஷம் ஹ்ரீம் ஹீம்பட் ஸ்வாஹா.நோயின்றி வாழ :சொத்து , சுகம் எல்லாம்  இருந்தும் அவற்றை  நாம் அனுபவிக்க வேண்டும். அப்படி அதை  நாம் அனுபவிக்க வேண்டும் என்றாள், நாம் நோயின்றி இருத்தல் வேண்டும். எந்த விதமான நோய் இல்லாமல் வாழ ஸ்ரீதன்வந்திரியை வணங்குதல் வேண்டும் .5. தருணாம் புத சுந்தரஸ்த தத்வம்பபு தன்வந்தரிருத்தி தோ அம்புஸரோ:அம்ருத கலசே வஹன கார்யோம்யாஅகிலாதி ஹர மாருதாலயேசாதனிமையை வெல்ல :பொதுவாகவே  நாம் தனிமையில் இருந்தால் நமது மனது அலை பாய்ந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட தனிமை நம்மை ஆபத்தில் கொண்டு போய் விடும். அத்தகைய ஆபத்திலிருந்து  நாம் விடுபட ஸ்ரீஐயப்பனை வழிபடுவோம்.6.பூத நாத ஸதாநந்தாஸர்வ பூத தயாபராரக்ஷ ரக்ஷ மஹா பாஹோசாஸ்த்ரே துப்யம் நமோ நம :கடன் தொலைகளில் விடு பட :ஒரு மனிதன் மிகவும் துன்பத்தில் மாட்டிக் கொள்வது கடன் பிரச்சனையில் தான். கடனை பிரச்னையின்றி வாங்கும் நாம். அதை திருப்பி கட்டும்போது பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறோம். அதிலிருந்து விடுபட ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும் .7. ஓம் வஜ்ரநாகாய வித்மஹேவக்ர தம்ஷ்ட்ராய தீமஹிதந்தோ நாரஸிம்ஹ : பர்சோதயாத்இயற்கை சீற்றத்திலிருந்து விடுபட :பஞ்ச பூதங்களாகிய நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்,  நிலம் போன்ற வற்றிலிருந்து வரும்  சீற்றங்களிலிருந்து  நாம் விடுபட நம்மையெல்லாம் தாங்கும் பூமாதேவியை வழிபட வேண்டும்.8. ஓம் தநுர்தாயை ச வித்மஹேசர்வ ஸித்யை ச தீமஹிதந்தோ தரா ப்ரசோதயாத்நாகதோஷம் :ஒருவருடைய ஜாதகத்தில் ராகு, கேது வால் ஏற்படுவது நாக தோஷம் என்பதாகும். அந்த நாக தோஷத்திலிருந்து விடுபட நாகராஜாவை வணங்க வேண்டும்.9. ஸம்ப காகார கும்பாக்ரோரந்த மௌனிர் நிரங்குச :சர்ப்பஹார கபீசூத்ர :சர்ப்ப யஞ்ஞோப வீதவாந்சர்ப்ப கோடீர கடக :சர்ப்ப க்ரைவேய காங்கத :சர்ப்ப கஷோத்ரா பந்த :சர்ப்ப ராகோத்தரீயக :உணவு கஷ்டம் நீங்க :மனிதனுடைய அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது உணவாகும். அந்த உணவு அவனுக்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்க ஸ்ரீசாகம்பரி தேவியை வழிபட வேண்டும்.10. அச்வத்த வடநிம்பாம்ர கபித்த பதரீகதேபநஸார்க்க கரீ ராதி க்ஷீரவ்ருஷ ஸ்வருபிணிதுக்கவல்லி நிவாஸார்ஹே தயநீயே தயாநிகேதாஷிதியை கருணாருபே சாகம்பரி  நமோஸ்துதே.வாழ்க்கையில் திருப்பம் உண்டாக :நம்முடைய செயல்கள் மற்றும் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் உண்டாக ஸ்ரீனிவாச பெருமாளை வழிபட வேண்டும்.11. ஓம் நிரஞ்ஜனாய வித்மஹேநிராபசாய தீமஹிதந்நோ ஸ்ரீநிவாச ப்ரசோதயாத்தடைகளை தகர்க்க :நம் எந்த செயல்களையும் செய்யும்போது எதாவது ஒரு தடை ஏற்படும். அத்தகைய தடையை தகர்ந்து வெற்றி அடைய வேண்டும் என்றால் விநாயகரை வழிபட வேண்டும்.12. ‘‘ஓம் நமோ வ்ரத பதயே,நமமா கணபதயே நம :ப்ரமத பதயே நமஸ்தேஅஸ்து லம்போதராயஏக தந்தாய, விக்ன ராசினே,சிவஸீதாய ஸ்ரீ வரதமுர்த்தயேநமோ நம :அனைத்து செல்வங்கள் பெற :வாழ்க்கையில் அனைத்து விதமான செல்வங்களையும் செல்வத்தையும் நாம் பெற வேண்டுமானால் ஆதிலட்சுமி வணங்குதல் அவசியம்.13. ஆதிலட்சுமி.‘‘யா ஸ்ரீஸ்வயம் ஆவிர் பபுவஐகத் ஹிதாய ப்ரஸன்ன வதனாதாம் ஷோடச பலப்ரதாம் பகவதீம்வந்தே அரவிந்த ஸ்திதாம்யா ஸ்ரீ க்ஷட் ஹஸ்த விராஜமானாஸாவரம் ததாதி ஸம்பூஜ கானாம்தஸ்யை சரியை நமோஸ்து ஸத்தம்நமாமிதாம் ஆதிலஷ்மிம் சுபாம்’’வீடு வாங்க ஒரு மனிதன் வசிப்பதற்கு இன்றியமையாதது இல்லம் தான். அத்தகைய  இல்லத்தை  அடைய ஸ்ரீவிநாயக பெருமானை வழிபடுதல் சிறப்பாகும்.14. ஓம் கணாநாம் த்வா கணபதிகும்ஹவாமஹேகவீம் கவீநாம் உபமஸ்ர வஸ்தமம்ஜ்யேஹ்டராஜம் ப்ரஹ்மணாம்ய்ரஹ்மணஸ்பதேஆந : ஸ்ருண்வன் ஊதிபி :ஸீத ஸாதனம்.மன வலிமை ஏற்பட :மன வலிமை இருந்தால் தான்  நாம் எதிலும் சாதிக்க முடியும். வீரம், செல்வம், கல்வி  அனைத்தும் இருந்து மன வலிமை இல்லை  என்றால் காது அறுந்த ஊசி போலாகும். நல்ல மன வலிமை பெற, ஐயப்பனை வழிபடுதல் நல்லது,15. ஓம் ஸ்ரீபூத நாதாய வித்மஹேபவ புத்ராய தீமஹிதன்னோ சாஸ்தா ப்ரசோதயாத்வியாபாரத்தில் லாபம் அடைய :எந்த ஒரு வியாபாரம் செய்தாலும் அதில் லாபம் ஈட்ட வேண்டும்.அந்த லாபத்திற்கு அதிபதியான ஸ்ரீஜெய துர்க்கா தேவியை வழி பட  வேண்டும்.16.‘‘ஓம் துர்கேதுர்கேரகதிணி ஸ்வாஹா’’மனதை ஒரு நிலைபடுத்த :நம்முடைய ஒவ்வொரு வெற்றிக்கும் முக்கிய காரணமாக இருப்பது நம் மனம்தான். மனதை மட்டும் நாம் ஒருமுகப்படுத்தி விட்டோம் என்றால் எதிலும் வெற்றி அடையலாம். மனதை அலை பாயாமல் இருக்க சிவபெருமானை வழிபட வேண்டும்.17. மனஸ்தே பாதாப்ஜே நிவஸதுவச : ஸ்தோத்ர பணிதௌகரெள சாப்யர்சாயம் ஸ்ருதரபிகதாகர்ணந விதௌதவத்யானே புத்திர்நயனயுகளம் மூர்த்தி விபவேபரக்ரன் தான் கைர்வாபரமசிவ ஐானே பரமத :கல்வியில் மேம் பட :எந்த செல்வம் வேண்டுமானாலும் அழியலாம். கல்வி செல்வம் என்றும் அழியாது.அத்தகைய கல்வி செல்வத்தில் நாம் சிறப்பாக  அமைய  சப்தமாதாக்களில்  ஒருவராகிய பிராம்ஹி தேவியை நாம் வழிபடவேண்டும்.18. ஓம் பிரம்ம சக்தியை வித்மஹேபீத வராயை தீமஹிதன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்.தைரியம்  உண்டாக :மனிதனின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு அவசியம் மனோ தைரியம். செல்வம், கல்வி, இருந்தாலும் தைரியம் இல்லாவிட்டால் ஒன்றும் இல்லை. ஆகையால் தைரிய சக்தி பெற ஸ்ரீலலிதாம்பிகையை வழிபட வேண்டும்.19. பராதர்நமாமி லலிதாசரணார விந்தம்பக்தேஷ்டதான நிரதம்பவஸிந்து போதம்பத்மாஸனாதி ஸீரநாயக பூஜநீயம்பத்மாங்குச த்வஜனதர்சன லாந்சநஸ்யம்வேலை நிரந்தரமாக :மனிதன் வாழ்த் தேவை முக்கியமானது வேலையாகும். அது தனியார் (அ) அரசு வேலையாகவும் இருக்கலாம். கிடைத்த வேலை நமக்கு நிரந்தரமா அமைய :20. ஸபஸரணிர ஜோபி : ஸோபயந்தி தரித்ரீம்பரிணதி ரமணீயாந் ப்ரக்ஷரந்தீ புமர்த்தாந்பவஸி புவநவந்த்யா பாதுகே ரங்கபர்த்துஸரண முகபக தாநவம் ஸாஸ்வதி காமதேனு திருமணம் நடைபெற :இன்றைய காலத்தில் திருமணங்கள் ஆண், பெண் இருபாலருக்கும் தள்ளிப் போகின்றன. அந்த திருமணத் தடையை அகல கீழ்க்காணும் அம்பாள் மந்திரத்தை நாம் சொல்ல வேண்டும்.21. காத்யாயனீ மகாதேவி மகாமாயே மகேச்வரிநந்தகோப சுதம் தேவி பதிம்மே தாதுமர்ஹளிஸர்வ மங்கள மாங்கல்யே ஸிவே ஸர்வார்த்த ஸாதிகேசரண்யே த்ரபம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே.தடைப்பட்ட திருமணம் நடைபெற :பலருக்கு திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்கும். அப்படி இருக்கும் நபர்கள் தினமும் மாலையில் தீபத்தை ஏற்றி கீழ்க்காணும் மந்திரத்தை சொல்லவும்.22. நமஸ்தே கிரிஜே தேவிநமஸ்தே போக நாயகிநமஸ்தே ஸர்வ பாபக்நிஸ்வர்ண கௌரி நமோஸ்துதேமனம் விரும்பிய பெண் கிடைக்க :நம் மனத்திற்கு பிடித்தமான பெண்ணை நாம் மனைவியாக அமைய ஸ்ரீசந்திர பகவான் மந்திரத்தை சொல்லவும்.23. பத்மத் வஜாய வித்மஹேஹேமருபாய திமஹீதன்னோ ஸோம ப்ரசோதயாத்ஆண்களுக்கு திருமணம் நடைபெற :திருமணத் தடை என்பது இன்று பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்குப் அதிகமாக இருக்கிறது. இன்றைக்கு அந்த தடை நீங்க தினமும் கீழ்க்காணும் மந்திரத்தை சொல்ல வேண்டும்.24. விதே ஹி தேவி கப்பாணம்விதே ஹி விபுலாம் ச்ரியம்ரூபம் தேஹி ஐயம் தேஹியசோ தேஹி த்விஹோ ஜஹி !பதனீம் மனோர மாம் தேஹிமானோவ்ருத்தனு ஸாரீனிம்தாரினிம் துர்த ஸம்ஸாரஸாகரஸ்ய குலோத்பவலம்.மாங்கல்யம் பலம் கிடைக்க :கணவனுக்கு எந்த விதத்திலும் ஆபத்து வராமல் இருக்க, நோயின்றி வாழ வெளியூர் பயணம் செய்யும்போதுஎந்த வித ஆபத்து இல்லாமல் கணவன் கட்டிய மாங்கல்யம் பலம் பெற, கணவன் நீண்ட ஆயுளுடன் இருக்க கீழ்க்காணும் மந்திரத்தை  சொல்லவும்.25. மங்களே மங்களாதாரேமாங்கல்யே  மங்களப்ரதேமங்களார்த்தம் மங்களேசிமாங்கல்யம் தேஹிமே ஸதா.அனுஷா…

The post காரிய சித்தி மந்திரங்கள் appeared first on Dinakaran.

Tags : Lord ,Saturn ,
× RELATED இறைவன் காட்டும் ரெட் அலர்ட்!