×

ரஷ்ய போர் விமானங்களை நடுவானில் மறித்த ஜப்பான்

மாஸ்கோ: ரஷ்ய நாட்டின் டூபோலிவ், டியூ-95எம்எஸ் என்ற அணுகுண்டு வீசும் போர் விமானங்கள், பசிபிக் பெருங்கடல் பகுதியில், ஜப்பான் நாட்டின் கடல் எல்லைக்குள்  நேற்று அனுமதியின்றி நுழைந்தன. இதை கண்டறிந்த ஜப்பான், தனது எப்-15 போர் விமானங்களை அனுப்பி நடுவானில் அந்த விமானங்களை இடைமறித்தன. பின்னர்,  திருப்பி செல்லும்படி ்ரஷ்ய விமானங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, ரஷ்ய விமானங்கள் திரும்பி சென்றன. இது பற்றி ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ‘‘ரஷ்ய போர் விமானங்கள் பசிபிக் பெருங்கடலின் பொதுவான கடல் பகுதியில் மட்டுமே பறந்தன. ஜப்பான் எல்லைக்குள் செல்லவில்லை,’’ என்றனர்….

The post ரஷ்ய போர் விமானங்களை நடுவானில் மறித்த ஜப்பான் appeared first on Dinakaran.

Tags : Japan ,Moscow ,Russia ,Pacific Ocean ,
× RELATED ஜப்பான் நாட்டுடன் இணைந்து வெள்ளத்...