×

தோஷ நிவர்த்திக்கு அனுமன் வழிபாடு மற்றும் பரிகாரங்கள்

வெண்ணெய் வழிபாடு: வெண்ணெய் சாத்தி ஆஞ்சநேயரை வழிபடுவது விசேஷம் போக்குவதாகும். வெண்ணெய் எப்படி உருகுகிறதோ, அதைப்போல ராமநாம ஜெயத்தால் அவர் உள்ளம் உருகுகிறார். வெண்ணெய் குளிர்ச்சி தருவதாகும். போர்க்காலத்திலே வீர அனுமான் பாறைகளையும், மலைகளையும், பெயர்த்து எடுத்து கடும் போர் செய்தார். இதனால் அவரது உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதற்காகவே வெண்ணெய் சாத்தி வழிபடுகிறோம்.நவக்கிரக தோஷம் போக்கும் அனுமன்: அனுமனின் வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி உள்ளன. அதனால் நவக்கிரக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவரை வழிபட்டால் பலன் கிடைக்கும். மாதந்தோறும் மூலநட்சத்திரத்திலும், அமாவாசை திதியிலும் வழிபட்டு பலன் பெறலாம். வெற்றிலைமாலை, துளசி மாலை, வடைமாலை, எலுமிச்சை மாலை ஆகியன சாற்றி வழிபட்டால் நம் துன்பங்கள் பனிபோல் விலகும்.வடைமாலை சாத்துவது ஏன்?போர்க்களத்தில் கொழுப்பு நிறைந்த அரக்கர்களையும் தமது உடல் வலிமையால் அழித்துள்ளார் ஆஞ்சநேயர். அதனால் தான் கொழுப்பு சத்து நிறைந்த உளுந்தைச்சேர்த்து அவருக்கு வடை மாலையாக கோர்த்து அணிவிக்கின்றனர். சீதாதேவி பரிசாக வழங்கிய முத்துமாலையை சுவைத்து அதில் ராமசுகம் இருக்கிறதா? என்று பார்த்து பிய்த்து எறிந்தவர் அனுமன். அது போலவே கழுத்தில் அணிவிக்கப்பட்ட வடை மாலையையும் அவர் சுவைத்து பார்ப்பதாக ஐதீகம்.வெற்றிலை மாலை:இலங்கையில் ராமனுக்கும், ராவணனுக்கும் யுத்தம் நடைபெற்றபோது  அரக்கர்களை வீழ்த்தி போர்க்களத்தில் வெற்றி நாட்டியவர் அனுமன். அதனால் தான் அவருக்கு கொடியிலேயே வளரும் வெற்றிலையை மாலையாக போடுகிறார்கள்.இலங்கையில் அசோகவனத்தில் சீதாபிராட்டியார் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தபோது ராமதூதனாக சென்ற அனுமன், சீதையை சந்தித்து ராமர் விரைவில் இலங்கை வந்து உங்களை சிறை மீட்டு செல்வார் என்று கூறினார். இதைக்கேட்டு மகிழ்ந்து போன சீதை அருகில் இருந்த வெற்றிலைக் கொடியில் இருந்து வெற்றிலையைப் பறித்து அனுமனின் சிரசில் போட்டு சிரஞ்சீவியாக இருப்பாயென்று கூறி ஆசி வழங்கினார். இதை நினைவு கூரும் வகையில் வாழ்க்கையில்வெற்றி பெற வேண்டி அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவிக்கின்றனர். …

The post தோஷ நிவர்த்திக்கு அனுமன் வழிபாடு மற்றும் பரிகாரங்கள் appeared first on Dinakaran.

Tags : Sathi Anjaneya ,Ramanama Jaya ,
× RELATED அரசியல் சாசனத்தை மாற்ற சதி; எஸ்.சி.,...