×
Saravana Stores

வைத்யனாய் அருளும் வீரராகவன்

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற திருவள்ளூர் வீரராகவபெருமாள் திருக்கோயில்  புராண காலத்தில் இத்தலம் திரு எவ்வுள், எவ்வுள், கிங்கிருஹரபுரம், எவ்வுள்ளூர் , வீச்சாரண்யச் ஷேத்ரம், புண்யாவார்த்த ஷேத்ரம் என வழங்கப்பட்டது. மூலவர்: வீரராகவப் பெருமாள் (கிங்கிருஹசன், எவ்வுட்கிடந்தான்,வைத்ய வீரராகவர்) எனும் திருப்பெயர்களிலும், தாயார்:   கனக வல்லித் தாயார் (வசுமதி). எனும் திருப்பெயரிலும் அருளும் தலம். இத்தல தீர்த்தம்:  ஹ்ருத்தபாப நாசினி என வணங்கப்படுகிறது. திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார்  போன்றோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம். இத்தல விமானம் விஜயகோடி விமானம் என வணங்கப்படுகிறது. இத்திருத்தலம்  108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சென்னைக்கு அருகில் திருவள்ளூரில் இக்கோயில்அமைந்துள்ளது.  கிருத யுகத்தில் புருபுண்யர் என்ற முனிவர் தன் மனைவி சத்யவதியுடன் பத்ரிகாஷ்ரமத்தில் வசித்து வந்தார். அவர்களுக்கு பிள்ளைபேறு இல்லை. எனவே அந்த முனிவர் பிள்ளைபேறு வேண்டி புத்ரகாமேஸ்டி (சாலி யாகம்) யாகம் மிகவும் பக்தியுடனும் ஈடுபாட்டுடனும் செய்ய தொடங்கினார். தினமும் ஒரு நாளைக்கு 1000 முறை என்ற வகையில் ஒவ்வொருமுறைக்கும் மந்திரத்தில் ஓதி நெய் எடுத்து ஹோமகுண்டத்தில் சேர்த்து ஒரு வருட காலத்த்ற்கு யாகம் செய்து முடித்தார். யாகத்தின் இறுதி நாளன்று யாகம் முடிவு பெரும் சமயத்தில் ஸ்ரீமன் நாராயணன் ஹோம ஜ்வாலையில் தோன்றி முனிவர் செய்த ஹோமத்தில் தான் மனம் மகிழ்ந்ததாகவும் முனிவர் வேண்டுவதை தருவதாகவும் கூறினார். முனிவரும் தனக்கு புத்திர பாக்கியம் அளிக்க வேண்டினார். ஸ்ரீமன் நாராயணனும் அவ்வாறே புத்திர பாக்கியம் அளித்து அவ்வாறு பிறக்கும் பிள்ளைக்கு முனிவர் செய்த யாகத்தின் பெயரையே சூட்ட சாலிஹோத்திரன் என்று அழைக்குமாறும் ஆசி வழங்கி மறைந்தார்.  பிறகு முனிவரும் ஹோம பிரசாதங்களை தனது மனைவிக்கு அளித்தார். பத்து மாதங்கள் கழித்து புருபுண்யருக்கு ஓர் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. ஸ்ரீமன் நாராயணன் உத்தரவுப்படி முனிவரும் அந்த குழந்தைக்கு சாலிஹோத்திரன் என்று பெயரிட்டார். சாலிஹோத்திரன் தான் வளர்ந்து வருகையில் பல்வேறு நல் முன்னேற்றங்களுக்கான அறிகுறிகளுடன் விளங்கினார்.ஓர் தை அமாவாசை நாளில் சாலிஹோத்ரர் திருவள்ளூர் வந்த போது அங்கிருந்த ஹ்ருத்தாபனாசினி தீர்த்தத்தில் ப்ரம்ஹா உள்ளிட்ட தேவர்களும் வசிஷ்டர் உள்ளிட்ட முனிவர்கள் பலரும் நீராடுவத கண்டார். உடனடியாக ஓராண்டு காலத்திற்கு பெருமாளை குறித்து கடும் தவம் மேற்கொண்டார். ஒரு வருடம் கழித்து தவத்தை முடித்து சாலிஹோத்ரர் ஹ்ருத்தாபனாசினியில் நீராடி காலை பூஜைகளை துவங்கினார். ஒரு வருடகாலம் உணவும் நீரும் இன்றி தவமேற்கொண்டதால் அரிசி மாவு சிறிது எடுத்து அதில் கொஞ்சம் பிரசாதம் தயார் செய்தார். அத மூன்று பாகங்களாக்கி முதல் பகுதியை ஸ்ரீமன் நாராயணனுக்கும், இரண்டாவது பகுதியை விநியோகத்திற்கும், மூன்றாவது பகுதியை தனக்கும் வைத்துக்கொண்டார்.  அப்போது ஸ்ரீமன் நாராயணன் ஒர் கிழ பிராமணர் வடிவம் கொண்டு சாலிஹோத்ரர் விநியோகம் செய்ய காத்திருக்கும் இடத்திற்கு வந்தார். அவர் கிழ பிராமணரை கண்டதும்தான்விநியோகம் செய்ய வைத்திருந்த பிரசாதத்தை அவருக்கு வேண்டினார். அதை முழுவதும் உட்கொண்ட கிழ பிராமணர் முகத்தில் திருப்தி இல்லாமல் இருப்பதைக் சாலிஹோத்ரர் கண்டார். பிறகு கிழ பிராமணரை விசாரித்ததில் அவர் கடந்த நான்கைந்து நாட்களாக ஏதும் உண்ணாமல் இருந்ததால் முனிவர் தந்த உணவு போதவில்லை என்றுரைத்தார். இதை கேட்டதும் முனிவரும் தனக்கென வைத்திருந்த பாகத்தை கிழ பிராமணருக்கு அளித்தார். வந்த விருந்தாளியும் திருப்தி அடைந்து சென்றார். மீண்டும் சாலிஹோத்ரர் உணவு நீர் ஏதுமின்றி தவமேற்கொண்டு, அடுத்த புஷ்ய அமாவாசையன்று தவத்தை முடித்து ஹ்ருத்தாபனாசினியில் புனித நீராட செல்லுகையில் நற்சகுனங்கள் பலவற்க்  கண்டார். காலை பூஜைகளை முடித்து நைவேத்யத்திற்கு அரிசி கொண்டுவந்து கடந்த ஆண்டை போலவே மூன்று பாகங்களாக்கி ஸ்ரீமன் நாராயணனுக்கு முதல் பகுதியை நைய்வேத்தியம் செய்துவிட்டு விருந்தாளிக்கான இரண்டாம் பகுதியையும் தனக்கான மூன்றாவது பகுதியையும் வைத்து காத்திருந்தார். இந்த முறை ஸ்ரீமன் நாராயணன் கிழ பிராமண வடிவில் வந்த போது முனிவரும் பிரசாதத்தை முழுவதுமாக அளித்தார். கிழ பிராமணரும் அவை அணைத்தையும் உண்டு மகிழ்ந்து ‘நான் படுத்து ஓய்வு எடுப்பது எங்கு? (எவ்வுள் ?)’ என்று சாலிஹோத்ரரிடம் கேட்டார்.அப்போது அங்கு வந்த ராஜகுமாரியின் அழகில் மயங்கிய ராஜகுமாரனும் தானாகவே அவளை மணந்துகொள்ளும் விருப்பத்தை தெரிவித்தான். அதற்கு ராஜகுமாரி தன்னை திருமணம் செய்ய வேண்டுமானால் அங்குள்ள ஹ்ருத்தாபனாசினியின் தென் புறம் உள்ள திருக்கோயிலில் உள்ள ஸ்ரீ வீரராகவரை வழிபட்டு வருமாரு கோரினாள். ஆனால் ராஜகுமாரன் அதனை ஏற்காமல் அங்கிருந்து நகராமல் தான் ராஜகுமாரி மீது கொண்ட காதல் மிகவும் உண்மையானது என்று விவாதிக்கலானான். பிறகு ராஜகுமாரி தனது பெற்றொரை வரவழைத்தாள். அங்கு வந்த ராஜகுமாரியின் பெற்றோர் ராஜகுமாரனைப் பற்றி விசாரிக்கையில் தன்னை இன்னாரென்று காட்டிக்கொள்ளவில்லை. எனினும் தான் ராஜகுமாரியை மணந்தால் அங்கேயே தங்கி விடுவதாக ஸ்ரீ வீரராகவ மீது ஆணையிட்டு வாக்களித்தார். அந்த வாக்குறுதியை ராஜகுமாரியின் பெற்றோர்களும் நல்லதாக எண்ணி திருமணத்தை நிச்சயித்து முடித்தனர். ராஜகுமாரியின் பெற்றொர்கள் அவர்தம் குல வழக்கப்படி திருமணம் முடிந்ததும் திருமணமான் தம்பதியை ஸ்ரீ வீரராகவர் திருக்கோயிலுக்கு ஏனைய உறைவினர்களுடன் அழைத்துச் சென்றனர்.கருவறையில் தரிசனத்திற்காக் செல்லும் போது அணைவரும் வியக்கும் வண்ணம் ராஜகுமாரனும் ராஜகுமாரியும் ஸ்ரீ வீரராகவருடன் ஐக்கியமாகி அவர்கள் ஸ்ரீ வீரராகவர் மற்றும் ஸ்ரீ கனகவல்லி தாயாராக காட்சி அளித்து அனைவருக்கும் அருள்பாலித்தனர்.இக்கோயிலின் இறைவன் ”வைத்திய வீரராகவர்” என்றும் அழைக்கப்படுகிறார்.  தீராத நோய்களை வீரராகவர் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையில் மக்கள் சிறிய உலோகத் தகட்டில் நோயினால் பாதிக்கப்பட்ட உறுப்பைச் செதுக்கி அந்நோயைத் தீர்த்து வைக்குமாறு கடவுளிடம் கோரிக்கை சமர்ப்பிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இறைவனுக்கு இங்கு சந்தன எண்ணெயால் மட்டும் அபிஷேகம் செய்யப்படுகிறது.  ஸ்ரீதேவித் தாயார் வசுமதி எனும் பெயரில் திலிப மகாராஜாவிற்கு பெண்ணாக அவதரித்து வாழ்ந்து வர, வீரநாராயணன் எனும் பெயருடன் வேட்டைக்குச் சென்ற பெருமாள் தாயாரை மணமுடித்ததாகத் தலவரலாறு. அதன்பின்னரே பெருமாள் பெயர் மாறிற்று, அதுவரை கிங்கிருஹேசன் எனும் பெயரே பெருமாளுக்கு முக்கிய திருப்பெயராக விளங்கிற்று. இத்திருக்குளத்தை பார்த்தாலோ, தொட்டாலோ, நீராடினாலோ மனதில் உள்ள அனைத்து வேதனைகளும் தீரும் அளவிற்கு புனிதமானதாகும். கங்கை, கோதாவரி நதிகளை விட புனிதமாக கருதப்படுகிறது. ஏனைய திருக்குளத்தின் நடுவில் உள்ள மண்டபத்தில் திருவிழாக்கள் நடைபெறுகின்றது.திருவள்ளூர் பல்வேறு முனிவர்கள் வாழ்ந்த அடர்ந்த காடாக இருந்தமையால் பிக்ஷாரண்யம் என்று புராண காலத்தில் அழைக்கப்பட்டது. இத் திருக்கோயிலின் கோபுரத்தின் சிற்பங்களில் இந்து சமய பண்பாட்டையும் திராவிடர்களின் கலையையும் காண்பது கண் கொள்ளக் காட்சியாகும்.  திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் மாதம் தோறும் அமாவாசை தினத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்க பக்தர்கள் வருவார்கள். மகாளய, தை அமாவாசையில் பக்தர்கள் கூட்டமாக திதி பூஜைகளை மேற்கொள்வார்கள். தை அமாவாசை தினத்தில் வீரராகவப் பெருமாள் கோயிலுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து, இரவு கோயிலில் தங்கி அடுத்த நாள் அதிகாலை கோயில் குளத்தின் கரையில் வாழை இலை போட்டு முன்னோர்களுக்கு பிடித்தமான உணவுகளை படைத்து வழிபட்டு, பிண்டங்களை குளத்தில் கரைத்து வழிபாடுகளை பூர்த்தி செய்வார்கள். திருவள்ளூர் ரயில் நிலையம், சென்னையில் இருந்து சேலம், ஈரோடு, பெங்களூரு, மங்களூர், திருவனந்தபுரம், புனே, மும்பை போன்ற பல முக்கிய நகரங்களுக்கு செல்லும் ரயில் மார்க்கத்தில் உள்ளது. கூடுதலாக, சென்னை சென்ட்ரல், அரக்கோணம் மற்றும் திருத்தணி ஆகிய இடங்களுக்கு காலை முதல் பின்னிரவு வரை ரயில் போக்குவரத்து உள்ளன….

The post வைத்யனாய் அருளும் வீரராகவன் appeared first on Dinakaran.

Tags : Vaidyanai ,Thiruvallur Veeragawaperumal Temple ,Thiru ,Evvul ,Kingiruharapuram ,Evvullur ,Arulum Veeraragavan ,
× RELATED உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வள்ளலார்...