×

ஞானம் சேர்க்கும் ஆதிபுரீஸ்வரர்

நம்பிக்கை வைத்தோம் நாயகன்நமச்சிவாய மலரடி சரணம்!தும்பிமுகன் தந்தை ஒற்றியூர்அம்பிகை மணாளன் தியாகேசன்!அழியாவாழ்வின் அருமருந்தெனஆதிபுரி அருளும் ஈசன்!ஞானம் பிறக்க வழிகாட்டும்ஞாலம் கூடி நின்று வாழ்த்தஆலம் உண்ட நீலகண்டன்அலைவீசும் ஆதிபுரி ஆளும் சங்கரனைகலைபேசும் வடிவுடைஅம்மையைவலைவீசி நலம் கோடிபெறுவோம்!ஆண்டாண்டு காலம் அழுதாலும்மாண்டவர் மீண்டு வருவதில்லைகண்டுகொள் நிலையான தத்துவம்வண்டுவிழி தேவியுடன் சிவன்உண்டு உறையும் ஆதிபுரிகாணபண்டுசெய் தவத்தாலெய்தும் ஞானம்!ஒற்றியூர் அருட்கடல் நகரமதைசுற்றிவந்து எழுத்தறி நாதன் கழல்பற்றி பாசப்பற்ற றுப்போம்!வெற்றிகொள் ஞானம் கைகூடும்நெற்றி திலகவடிவழகி கருணையால்வற்றாத ஆழி செல்வஞானம் சேரும்!இனியும் பிறவி நமக்கேதுபட்டினத்தார் நறைமொழி பருகியபின்னே!இனியும் பிறவி உள்ளதோ கூறுபனிநாயகம் ஒற்றியூரனை சரணடைந்தபின்னே!நனிபேதையன் நாவுளறும்  சொல்கேட்டுகனிமுகம் கடிமலர் காலைப்பொழுதாய்ஞானக்கட லோரம் வாழும்படம்பக்கநாதன் பிறவிப்பிணி தீர்ப்பான்!சுந்தரருக்காக தோழமை தூது சென்றுசங்கிலியாரின் காதல் தந்த இறைவன்!பசியோடு படுத்த வள்ளலாருக்குபரிந்து அமுதூட்டிய இறைவி!பக்திவிழா தினம் கண்டு மகிழபக்தர்கள் கூடும் திருவொற்றி யூரில்அலைகள் ஓயாது கரை தொடும்அம்பிகை மதிமுகம் ஞானம் தரும்!ஆனந்தம் தரும் ஆதிபுரி உறைஅம்பிகைநாதன் துணையிருக்க ஏதுகுறை!ஐந்தெழுத்தில் திளைப்போம் முழுராத்திரிஇந்திரபதவி இறைவரம் சேர்க்கும் சிவராத்திரி!தொகுப்பு: விஷ்ணுதாசன்

The post ஞானம் சேர்க்கும் ஆதிபுரீஸ்வரர் appeared first on Dinakaran.

Tags : Adipureeswarar ,Nayakannamachivaya ,Malaradi Saranam ,Thumbimukhan ,Otiyurambigai ,Manalan ,Thiagesan ,Adhiapuri Arulaum Eesan ,
× RELATED பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம்...