×

மக்கள் என்ன நினைக்கிறார்களோ, அதை செய்வதே எனது தலையாய பணி: சேலத்தில் தேர்தல் பரப்புரையை தொடங்கினார் முதல்வர் பழனிசாமி.!!!

சேலம்: தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெற இன்னும் 24 நாட்களே உள்ளது. அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யும் பணி தொடங்கியது. இந்நிலையில், இன்று முதல் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி  இறங்கியுள்ளார்.இன்று முதல்நாளில், சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் ஏற்காடு(ST) தொகுதி வேட்பாளர் சித்ராவுக்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரையை தொடங்கினார். பிரச்சாரத்தின்போது முதல்வர் பழனிசாமி கூறுகையில்,  வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள முதல் நாளில் பரப்புரையை தொடங்கியுள்ளேன். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையிலான தேர்தல். சட்டமன்ற தேர்தலில் தர்மம் வெல்ல இரட்டை இலை  சின்னத்திற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார். விவசாய குடும்பத்தில் பிறந்ததால், விவசாயிகளின் கஷ்டங்களை உணர்ந்து திட்டத்தை செயல்படுத்தியுள்ளேன். 2011 தேர்தல் பிரச்சாரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியான மின்மிகை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றி உள்ளோம்.  இந்தியாவிலேயே தமிழ்நாடு உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக திகழ்கிறது. புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் நிவாரணம் வழங்கப்பட்டது. மக்கள் என்ன நினைக்கிறார்களோ, அதை செய்வதே எனது  தலையாய பணி என்றும் தெரிவித்தார். …

The post மக்கள் என்ன நினைக்கிறார்களோ, அதை செய்வதே எனது தலையாய பணி: சேலத்தில் தேர்தல் பரப்புரையை தொடங்கினார் முதல்வர் பழனிசாமி.!!! appeared first on Dinakaran.

Tags : CM Palanisamy ,Salem ,Tamil Nadu Assembly ,CM ,Palanisamy ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...