×

பாலியல் புகார் எதிரொலி; 7 வருடமாக பாடகி ஸ்வாகதா பேசாதது ஏன்? தயாரிப்பாளர் கேள்வி

சென்னை: தமிழ் பட இசையமைப்பாளர் தனக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக சமீபத்தில் பாடகி ஸ்வாகதா புகார் கூறினார். இது பற்றி தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியது: இந்த சம்பவம் நடந்து 7 ஆண்டுகளாகியது என்றால், அதே நேரத்தில் ஏன் வெளிப்படுத்தவில்லை. குடும்பத்தில் ஆதரவு இருந்தபோதும் அல்லது போலிசில் புகாரளிக்க வாய்ப்பு இருந்தபோதிலும் அது செய்யப்படவில்லை என்பதே ஆச்சரியமாக இருக்கிறது.

அந்த நேரத்தில் புகாரளித்திருந்தால் விசாரணை நடைபெற்று, ஆதாரங்களும் கிடைத்திருக்கும். குற்றம் செய்தவர் தண்டனை அணுபவித்திருப்பார். ஸ்வாகதா லேசு பட்டவர் கிடையாது, அவங்க வீட்டில் 4 பெண்கள் இருக்கிறார்கள். அதிலும் நடிகை மாயா தான் இவர் தங்கச்சி. மாயா என்றாலே எல்லோருக்கும் தெரியும்.

அவர் ரொம்ப தைரியமான பொண்ணு, அப்படிப்பட்ட ஒரு தைரியமான பொண்ணு இருக்கும் வீட்டில் இவர் உண்மையை வெளியே கொண்டு வராமல் விட்டதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. இப்போது அவர் பேசுவது சரிதான், ஸ்வாகதாவிற்கு பாதிப்பு ஏற்பட்டது உண்மையாக இருக்கலாம், ஆனால் அதே சமயம் அவரைப்பற்றி பேசியிருந்தால் மற்ற பெண்கள் பாதிக்கப்படாமல் இருந்திருப்பார்கள்.

Tags : Swagatha ,Chennai ,Balaji Prabhu ,Swagatha Lasu ,
× RELATED நிமிஷா சஜயன் படத்துக்கு விருது