×

தூத்துக்குடியில் ரூ.5-க்கு விற்கப்படும் அன்னாசிப் பழம்.: கேரளாவில் இருந்து டன் கணக்கில் இறக்குமதி

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூ.5-க்கு விற்கப்படும் அன்னாசிப் பழத்தை பொதுமக்கள் அதிக அளவில் விரும்பி வாங்கி சென்றனர். தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில் உள்ள கடை ஒன்றில் கேரளாவில் இருந்து டன் கணக்கில் அன்னாசிப் பழம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் தற்போது அன்னாசிப் பழம் சீசன் என்பதால் குறைவான விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் ரூ.5- முதல் அதிகபட்சமாக ரூ.15-க்கு அன்னாசிப் பழம் விற்பனை செய்யப்படுகிறது. வழக்கமாக அன்னாசிப் பழம் ரூ.50- முதல் அதிகபட்சமாக ரூ.60 வரை அன்னாசிப் பழம் விற்பனையாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் அன்னாசிப் பழம் தற்போது கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் மிக குறைந்த விலைக்கு கிடைப்பதால் பழத்தை பொதுமக்கள் அதிக அளவில் விரும்பி வாங்கி செல்கின்றனர். …

The post தூத்துக்குடியில் ரூ.5-க்கு விற்கப்படும் அன்னாசிப் பழம்.: கேரளாவில் இருந்து டன் கணக்கில் இறக்குமதி appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Kerala ,Thoothukudi-Palayamgottai road ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி விஸ்வபுரத்தில் மழைநீர்...