×

சந்திரகலா

செய்முறைசர்க்கரை இல்லாத கோவாவில் ஏலக்காய் தூள், முந்திரி தூள் சேர்த்து பிசையவும். சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்கவிட்டு ஒரு கம்பி பதம் பாகு வந்தவுடன் இறக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு, ஒரு பாத்திரத்தில் மைதா மாவு சிறிதளவு, தண்ணீர், கலர் பவுடர், சோடா ஆகியவற்றை கலந்து நெய் சூடாக்கி அதில் கலந்து நன்றாக பிசையவும். பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து பூரி போல் திரட்டி நடுவில் கோவா கலவையை வைத்து சோமாசு போல் செய்து கடாயில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் அதில் போட்டு பொரித்து எடுக்கவும். பிறகு, சர்க்கரை பாகில் போட்டு ஊறவைத்த பின் எடுத்து பரிமாறவும்.

The post சந்திரகலா appeared first on Dinakaran.

Tags : Chandrakala ,
× RELATED பாரம்பரிய உணவுத் திருவிழா