×

‘கயல்’ சந்திரன் நடிக்கும் ‘சிங்கா’

ருத்ரம் சினிமாஸ், எஸ்.ஆர் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம், ‘சிங்கா’. இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. மனிதர்களுக்கும், நாய்களுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையப்படுத்தி உருவாகியுள்ள இதை ராஜ துரைசிங்கம் எழுதி இயக்கியுள்ளார். இவர் வசந்த், ஏ.சற்குணம் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

வேலாயுதம் ராஜேந்திரன் தயாரித்துள்ளார். ‘கயல்’ சந்திரன், சிஜா ரோஸ், மீனாட்சி, ஆதித்யா கதிர், மலையாள நடிகர் அரிஸ்டோ சுரேஷ் நடித்துள்ளனர். மனோஜ் சின்னசுவாமி இசை அமைக்க, அசோக் குமார் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சிங்கா என்ற கேரக்டரில் லாப்ரடார் நாய் ஒன்று சிறப்பாக நடித்துள்ளது.

Tags : Kayal' Chandran ,Rudram Cinemas ,SR Films ,Raja Duraisingham ,Vasanth ,A. Sarkunam ,Velayudham Rajendran ,Sija Rose ,Meenakshi ,Aditya Kathir ,Aristo Suresh ,Manoj Chinnaswamy ,Ashok Kumar Raj ,
× RELATED அர்ஜுன் பிரபாகரன், ஆராத்யா இணையும் பேட்டில்