×

மாநிலத்தில் பாஜ ஆட்சி அமைந்தபின் ரூ.76,376 கோடிக்கு தொழில் முதலீடு: மேலவையில் அமைச்சர் தகவல்

சட்டமேலவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது பாஜ உறுப்பினர் எஸ்.வி.சங்கனூர் எழுப்பிய கேள்விக்கு தொழில்துறை அமைச்சர் ஜெகதீஷ்ஷெட்டர் பதிலளிக்கையில், கொரோனா தொற்று காரணமாக மாநிலத்தில் பல தொழிற்சாலைகள் நஷ்டத்தில் இயங்கியது உண்மை. கொரோனா ஊரடங்கு முடிந்த பின், கொஞ்சம் கொஞ்சமாக தொழிற்சாலைகள் சுதாரித்து வருகிறது. கொரோனா ஊரடங்கு தளர்த்தியபின் மூடப்பட்ட தொழிற்சாலைகள் முதலில் தொடங்கிய மாநிலம் கர்நாடகம் மட்டுமே. நஷ்டத்தில் இயங்கி ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் பிரதமர் அறிவித்த திட்டங்களால் புனரமைப்பு தொடங்கியது. மத்திய அரசு வழங்கிய சிறப்பு பொருளாதார பேக்கேஜ் திட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டது. மின் கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்பட்டது. மாநிலத்தில் 712 பெரிய தொழிற்சாலைகள் உள்ளது. அவைகளில் 5,02,407 பேர் பணியாற்றி வருகிறார்கள். இதற்கு முன் பெங்களூருவில் அதிகம் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு வந்தது. பாஜ ஆட்சி அமைந்தபின் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களிலும் தொழிற்சாலைகள் தொடங்கும் வகையில் புதிய தொழில் கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் தார்வார் மாவட்டத்தில் ரூ.25 ஆயிரம் கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படுகிறது. மைசூரு, பெலகாவி மாவட்டங்களிலும் புதிய தொழிற்சாலைகள் தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மாநிலத்தில் பாஜ ஆட்சி அமைந்த பின் ஒன்றரை ஆண்டுகளில் ரூ.76,376 கோடி தொழில் முதலீடு பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் 1.77 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை ஏற்படுத்தியுள்ளோம் என்றார்….

The post மாநிலத்தில் பாஜ ஆட்சி அமைந்தபின் ரூ.76,376 கோடிக்கு தொழில் முதலீடு: மேலவையில் அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Baja ,CV ,Industry ,Minister ,Jekadishshetter ,Sanganur ,Corona ,Dinakaran ,
× RELATED பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில்...