×

காந்தியடிகளின் 153வது பிறந்தநாளையொட்டி எழும்பூர் அருங்காட்சியகத்தில் இன்று சிறப்பு கண்காட்சி

சென்னை: மகாத்மா காந்தியடிகளின் 153வது பிறந்த தினத்தை முன்னிட்டு அருங்காட்சியகங்கள் துறை, காந்தி உலக மையத்துடன் இணைந்து ‘மகாத்மாவை கொண்டாடுவோம்’ என்ற நிகழ்ச்சியை இன்று காலை 10 மணிக்கு எழும்பூர் அருங்காட்சியம் தேசிய கலைக்கூடம் தரைத்தளத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளது. காந்தியடிகள் கைப்பட எழுதிய கடிதம், டெலிகிராம், அவரது  நினைவில் வெளியிடப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் அரிய புகைப்படங்கள் அடங்கிய சிறப்பு கண்காட்சி அருங்காட்சியக சிறப்பு கண்காட்சி கூடத்தில் (வளர்கலை கூடத்தில்) அமைக்கப்பட்டுள்ளது. சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவினையொட்டி 75 சுதந்திர போராட்ட வீரர்களை பற்றிய விவரங்களும் கண்காட்சியில் இடம் பெறுகிறது. மேலும் தமிழகம் முழுவதும் இருந்து, 153 பள்ளி மாணவர்கள் மகாத்மா காந்தியடிகள் போல வேடமணிந்து, அவரது பொன்மொழி பதாகைகளை ஏந்தி பங்கேற்கின்றனர். தேச பக்தி பாடல்களை பாடியும், நடன நிகழ்ச்சி மூலமும் காந்தியடிகளின் சிறப்பினை போற்றுகின்றனர். இந்த நிகழ்ச்சியில் அரசு உயர்அலுவலர்கள், பல்துறை முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்….

The post காந்தியடிகளின் 153வது பிறந்தநாளையொட்டி எழும்பூர் அருங்காட்சியகத்தில் இன்று சிறப்பு கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Egmore Museum ,Gandhiji ,Chennai ,Mahatma Gandhi ,Department of Museums ,Gandhi World ,Center ,Mahatma ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...