- லலித் குமார்
- ரவுடி பிக்சர்ஸ்
- நயந்துறை
- விக்னேஷ் சிவன்
- கே. விஷ்ணு குமா
- பிரதீப் ரங்கநாதன்
- சீமான்
- எஸ்.ஜே
- சூர்யா
- யோகி பாபு
- கீர்த்தி ஷெட்டி
- மாளவிகா
- வைபவ் வாசுதேவன்
- அன்பக்தல் ஆர்கானிக் வேர்ல்ட்
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில் லலித் குமார் வழங்க, . எல்.கே. விஷ்ணு குமார் இணை தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், சீமான் , எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, கீர்த்தி ஷெட்டி , மாளவிகா, ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ” லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” (LIK)
2040ஆம் வருடம்… வைபவ் வாசுதேவன் என்கிற வைப் வசி ( பிரதீப் ரங்கநாதன்), அப்பா அன்புக்கடல் உடன் இணைந்து ஆர்கானிக் வேர்ல்டு என்கிற ஆர்கானிக் ஜெயிலை நடத்தி வருகிறார். அதாவது மொபைல் மற்றும் எலக்ட்ரானிக் கருவிகளுக்கு அடிமையான மனிதர்கள் தவறு செய்யும் தருவாயில் இங்கே கொண்டுவந்து அடைக்கப்படுபவர். இங்கே அவர்களுக்கு இயல்பான வாழ்வியல் பழக்கம் கொடுக்கப்படும். குறிப்பாக மொபைலுக்கு அடிமையான குழந்தைகளை நல்வழிப்படுத்தும் வகுப்புகளும் இங்கே கொடுக்கப்படுகின்றன. மொபைல் வாசனையே இல்லாத வசி வாழ்க்கையில் பார்த்தவுடன் தீமா ( கீர்த்தி ஷெட்டி) மீது காதல் வருகிறது. ஆனால் தீமாவுக்கோ மொபைல்தான் எல்லாம். எனில் மொபைல் இல்லாத நபரை எப்படி காதலிக்க முடியும் என தீமா தயங்குகிறார். இதனால் வசி வாழ்க்கையில் மொபைல் மற்றும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனியின் “LIK” எனும் புதிய செயலி நுழைகிறது. லவ் இன்சூரன்ஸ் கம்பெனியின் உரிமையாளராக சூரியன் ( எஸ். ஜே.சூர்யா) . சுமூகமாக சென்று கொண்டிருக்கும் வசியின் வாழ்க்கையில் Lik வழியாக விளையாடத் துவங்குகிறார் சூரியன். ஏன் எதற்கு பின்னணி காரணம் என்ன என்பது மீதி கதை.
வழக்கம் போலவே திரைக்கதையை தனது சுறுசுறுப்பான நடிப்பால் நகர்த்திச் செல்கிறார் பிரதீப் ரங்கநாதன். ஒரு பக்கம் மொபைல் இல்லாத வாழ்க்கை இன்னொரு பக்கம் மொபைல் தான் உலகம் என இரு வேறு உலகத்திற்குள் அவர் மாட்டிக் கொண்டு தவிப்பது சுவாரசியம். கிரீத்தி ஷெட்டி மிகவும் அழகாக இருக்கிறார், அவருடைய தெத்துப்பல்லு அவருக்கு மேலும் அழகு. ஆனால் நடிப்பில் தான் இன்னமும் ஏதோ ஒரு செயற்கைத்தனம் தெரிகிறது. ஆனால் கதைப்படி அவர் மொபைலால் வளர்க்கப்பட்ட குழந்தை என்னும் பொழுது ஏற்றுக் கொள்ளும்படி இருக்கிறது. படத்திற்கு மிகப்பெரிய பலம் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்புதான், அவர் திரையில் வந்தாலே அரங்கம் அதிருகிறது. மேலும் நாஸ்டாலஜிக் மொமெண்டாக ஆடும் நடனம் விக்கியின் ஸ்பெஷல் ட்ரீட். யோகி பாபுவின் ஓபன் ஃப்ரெண்ட்ஸ் கான்செப்ட் கலாய் ரகம். படம் முழுக்க அனிருத் குரல் புது முயற்சி.
அறிவியல் தொழில்நுட்ப ரொமான்டிக் திரைப்படம் ( Science Fiction Rom-Com movie) ஒன்று கொடுக்க ஒரு புதிய உலகையே உருவாக்கி இருக்கிறார் விக்னேஷ் சிவன். மொத்த படமும் நம்மை வேறு ஒரு உலகத்திற்கு கொண்டு செல்கிறது. Ai கேரக்டர்கள், ரோபோக்கள், மனிதர்கள் இல்லாத டெலிவரி, டாக்சி, AI கண்ணாடிகள், என தனது கற்பனைக் குதிரையை பல மைல்கள் ஓடவிட்டு இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
ரவிவர்மா ஒளிப்பதிவில் இதுவரை இல்லாத ஒரு புது உலகம் நம் கண் முன்பு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. காட்சிகளில் அவ்வளவு நிறங்கள், எலக்ட்ரானிக் கிராபிக்ஸ்கள் என கண்களுக்கு பக்கா விருந்து. படத்திற்கு இன்னொரு சிறப்பு கேரக்டர் என்றால் அனிருத் குரலும் அவரது இசையும் தான். தீமா தீமா பாடல், எனக்கென யாரும் இல்லையே பாடல், எல்லாமே ப்ளே லிஸ்ட் ட்ரெண்டிங் ரகம். அறிவியல் தொழில்நுட்ப திரைப்படம் என்பதால் பின்னணி இசையிலும் நிறைய சவுண்ட் எபெக்ட்ஸ்களை கலந்து கலக்கியிருக்கிறார் அனிருத். பிரதீப் ராகவ் எடிட்டிங் அருமை எனினும் ஒரு சில இடங்களில் நிறைய வசனங்களில் கடப்பது சலிப்பு ஏற்படுகிறது.
எல்லாம் ஓகே ஆனால் படம் முழுக்க காட்சிகளால் சொல்ல வேண்டிய பல இடங்கள் நிறைய பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதேபோல் சொல்ல வர வேண்டிய பல கருத்துக்கள் இக்கால இளைஞர்களுக்கே புரியுமா என்கிற சந்தேகம் உருவாகிறது. அந்த அளவிற்கு கதை முந்தைய தலைமுறைகளுக்கு அப்பாற்பட்டு நிற்கிறது. பிரதீப் திரைப்பட சிறப்பே ஏதாவது செய்து தாய்க்குலங்கள் மற்றும் பெற்றோர்களிடம் படத்தைக் கொண்டு சென்று விடுவார். ஆனால் அந்த மேஜிக் இந்த படத்தில் நடப்பது சிரமம்தான்.
மொத்தத்தில், பிரதீப் ரங்கநாதன் மற்றும் விக்னேஷ் சிவன் காம்போவில் ஒரு முழுமையான அறிவியல் தொழில்நுட்ப ரொமான்டிக் காமெடி திரைப்படமாக கலர்ஃபுல் விசுவல்களுடன் கவனம் பெறுகிறது இந்த “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” ( LIK).
