×

அசாமில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு… 700 கிராமங்கள் நீரில் தத்தளிப்பு; 3 காட்டு குதிரைகள், 2 மான்கள் உயிரிழப்பு!!

டிஸ்பூர் : அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 700 கிராமங்கள் நீரில் மிதக்கின்றன.2 லட்சத்து 60,000 பேர் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.கனமழையால் அசாம் மாநிலத்தில் 16 மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கவுகாத்தி நகரைச் சுற்றியுள்ள கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் வீடுகளில் இருந்த உடமைகள் அனைத்தும் நீரில் மூழ்கின.இதனால் பெண்கள், குழந்தைகள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.வெள்ளத்தில் சிக்கியவர்களை மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் படகுகளில் சென்று மீட்டு வருகின்றனர். கனமழை முடிவுக்கு வரும் வரை மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என அசாம் அரசு அறிவித்துள்ளது.அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் 2 வன உயிரியல் பூங்காக்கள் நீரில் மூழ்கி சிக்கி தவிக்கின்றனர்.3 காட்டு குதிரைகள், 2 மான்கள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. காசிரங்கா தேசிய உயிரியல் பூங்காவில் 50% நிலப்பகுதி தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் காண்டா மிருகங்கள் மேடான பகுதியை அடைந்து உயிர் பிழைத்தனர். …

The post அசாமில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு… 700 கிராமங்கள் நீரில் தத்தளிப்பு; 3 காட்டு குதிரைகள், 2 மான்கள் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Assam… ,Dispur ,Brahmaputra river ,Assam ,Dinakaran ,
× RELATED அசாமில் 7 ரயில்கள் ரத்தால்...