×
Saravana Stores

வாஷிங்டனை சதம் அடிக்க விடாத இந்திய அணியின் ‘த்ரீ இடியட்ஸ்’: வாசிம் ஜாபர் ‘ஜாலி’ கமென்ட்

இளம் வீரர்  வாஷிங்டன் சுந்தர் தனது முதல் டெஸ்ட் சதம் அடிக்கும் வாய்ப்பை  அடுத்தடுத்து ஆட்டமிழந்து கெடுத்த அக்சர், இஷாந்த், சிராஜ் ஆகியோரை முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் ‘ஜாலி’யாக த்ரீ இடியட்ஸ் என்று கிண்டல் செய்துள்ளார். இந்தியா-இங்கிலாந்து இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ். தடுமாறிக் கொண்டிருந்த அணியை ரிஷப் சதமடித்து நிமிர வைத்து வெளியேறினார். அடுத்து ஜோடி சேர்ந்த வாஷிங்டன் – அக்சர் படேல் பொறுப்புடன் விளையாடி கவுரமான ஸ்கோரை எட்ட வைத்தனர். அதிரடியாக விளையாடிய வாஷிங்டன் கட்டாயம் சதமடிப்பார், அக்சர் படேல் அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வாஷிங்டன் 96 ரன்னில் இருந்தபோது அக்சர் தேவையில்லாமல் ஓடி 47 ரன்னில் ரன் அவுட்டானார். இஷாந்த், சிராஜ் கை கொடுத்தால்  வாஷிங்டன் சதமடித்து விடுவார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் அடுத்து வந்த இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் டக் அவுட்டாக,  வாஷிங்டன்  சதமடிக்கும் வாய்ப்பு கை நழுவிப் போனது. வெறும் 5 பந்துகளில் 3 விக்கெட் காலியாக  முதல் இன்னிங்சும் முடிவுக்கு வந்தது. இந்தியா அந்த டெஸ்டில் வென்று தொடரை கைப்பற்றினாலும், வாஷிங்டன்  முதல்முறையாக  சதமடிக்கும் வாய்ப்பை இழந்தது பலருக்கும் வருத்ததை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாபர்  சமூக ஊடகத்தில் , ‘அக்சர், இஷாந்த், சிராஜ் ஆகியோர்  விழா ஒன்றில் வாஷிங்டன் அப்பாவை சந்தித்த போது… ஆட்டமிழக்காமல் 96* உண்மையில் சதத்தை விட  பெரியது. சிறப்பாக விளையாடினார்’ என்று எழுதியவர் கூடவே  ‘த்ரி இடியட்’ இந்தி படத்தில் முதல்வர் பொம்மன் இரானியிடம்  அமீர்கான்,  மாதவன், ஷர்மான் ஜோஷி ஆகியோர் மாட்டிக் கொண்டு விழிக்கும் திரைப்பட காட்சியை (தமிழில் நண்பன் படத்தில் கல்லூரி முதல்வர் சத்யராஜ் வீட்டு திருமணத்தில் சாப்பிடபோய் அவரிடம் சிக்கிக் கொள்ளும் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் விழிக்கும் காட்சியை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்) வெளியிட்டு ஜாலியாக கலாய்த்துள்ளார். அதனை ஆயிரக்கணக்கானவர்கள் லைக் செய்துள்ளனர். வாசிம் ஜாபருக்கு  பதிலளித்த வாஷிங்டன், ‘ ரொம்ப நன்றி சகோதரா! அவர்களுக்கு கட்டாயம் அப்பா  நிறைய பிரியாணி, அல்வா விருந்து தருவார்’ என்று நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்….

The post வாஷிங்டனை சதம் அடிக்க விடாத இந்திய அணியின் ‘த்ரீ இடியட்ஸ்’: வாசிம் ஜாபர் ‘ஜாலி’ கமென்ட் appeared first on Dinakaran.

Tags : Washington ,Wasim Jabar's' ,Washington Sunderar ,Aksar ,Ishant ,Dinakaran ,
× RELATED ஹாலோவீன் தினம் : பயங்கர பேய் உருவங்கள்,...