×

பில் இல்லாமல் கொண்டு சென்ற ₹2 கோடி வெள்ளி சிக்கியது

வத்தலக்குண்டு: கொடைரோடு டோல்கேட்டில் பில் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.2 கோடி மதிப்பிலான வெள்ளி பொருட்களுக்கு அதிகாரிகள் வரி, அபராதமாக ரூ.16 லட்சம் வசூலித்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே சுங்கச்சாவடியில் நேற்று மதுரை வணிகவரி அமலாக்க பிரிவினர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த 6 கார்களை நிறுத்தி சோதனையிட்டதில், ரூ.2 கோடி மதிப்பிலான வெள்ளி கொலுசுகள், டம்ளர்கள், குத்து விளக்குகள் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில், சேலம் வெள்ளி பொருட்கள் தயாரிக்கும் ஆலையில் இருந்து மதுரைக்கு வியாபாரத்திற்கு கொண்டு சென்றது தெரிந்தது. தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு செய்ததில் உரிய பில்கள் இல்லை என தெரிய வரவே அவர்கள், ரூ.8 லட்சம் வரியும், ரூ.8 லட்சம் அபராதமும் கட்ட கூறினர். கார்களில் வந்தவர்கள் ரூ.16 லட்சத்தை கட்டி விட்டு வெள்ளி பொருட்களை எடுத்து சென்றனர். …

The post பில் இல்லாமல் கொண்டு சென்ற ₹2 கோடி வெள்ளி சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Kodyrod Tolkate ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...