×

கண்டிப்பாக மீண்டு வருவோம்: விராட் கோஹ்லி பேட்டி

லீட்ஸ்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 3வது டெஸ்ட் லீட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 78, இங்கிலாந்து 432 ரன்கள் எடுத்தன. பின்னர் 354 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை ஆடிய இந்தியா 4வது நாளான நேற்று 278 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 76 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-1 என தொடரை சமன் செய்தது. முதல் இன்னிங்சில் 2, இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்திய ராபின்சன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.தோல்விக்கு பின் இந்திய கேப்டன் விராட்கோஹ்லி கூறியதாவது: டாஸ் வென்று முதலில் பேட்டிங் எடுத்தது தவறில்லை. ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாகத் தென்பட்டது. நாங்கள் சரியாகப் பந்துவீசவில்லை. இங்கிலாந்து மீண்டு வருவார்கள் என நாங்கள் எதிர்பார்த்தோம். பேட்டிங் அணியாக நாங்கள் சரியான முடிவுகளை எடுக்கவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டு வர எங்களுக்கு சில பார்ட்னர்ஷிப்கள் அமைந்தன. அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இது ஒரு நல்ல பிட்ச் என்பதால் நன்றாக பேட்டிங் செய்ய முடியும். ஆனால் நாங்கள் அதனை செய்ய தவறிவிட்டோம். உண்மையில் இங்கிலாந்து அணி இந்த வெற்றிக்கு தகுதியானதே. முதல் 2 டெஸ்ட்டில் நன்றாக விளையாடினோம். எங்களுடைய பேட்டிங் குழு நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அடுத்த டெஸ்டில் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப அணியைத் தேர்வு செய்வோம். இந்த இழப்பால் நாங்கள் மனச்சோர்வடைய மாட்டோம், ஓவல் டெஸ்ட் போட்டியை எதிர்பார்த்து உள்ளோம், எங்கள் அணி கண்டிப்பாக மீண்டு வரும். எங்கள் திறனை முதல் இரண்டு டெஸ்ட்களில் காட்டினோம். மீண்டும் அதைக் காட்டுவோம், என்றார். இங்கிலாந்து கேப்டன் ஜோரூட் கூறுகையில், பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். நாங்கள் இதுபோன்ற திறமைகளைக் கொண்டவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும், எங்களிடம் திறமை இருக்கிறது. இந்த வெற்றியை ஓவல் மைதானத்திலும் தொடர்வோம் என நம்புகிறேன், என்றார்….

The post கண்டிப்பாக மீண்டு வருவோம்: விராட் கோஹ்லி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Virat Kohli ,Leeds ,India ,England ,Dinakaran ,
× RELATED ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை கொஞ்ச...