×

ரோசல்பட்டியில் ஊராட்சியில் அதிமுக ஆட்சியில் அவசரகதியில் அமைத்த வாறுகால் பாலம்  சேதம்

விருதுநகர்: விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சியில் பாண்டியன்நகர்- முத்தால் நகர் இடையிலான தேவர் சிலை எதிர்புறத்தில் கடந்த மார்ச் மாதம் அவசர கதியில் ரோடுகள், வாறுகால் பாலங்கள் அதிமுக ஆட்சியின் போது கட்டப்பட்டன. அவற்றில் சிவமுருகன் தெருவில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. பள்ளிக்கூடம் செல்லும் தெருவில் வாறுகால் பாலம் கட்டி 5 மாதங்களாகிறது. வாறுகால் மற்றும் பாலம் கட்டிய ஒப்பந்தகாரர் பாலத்தில் எம்சாண்டை வைத்து பாலம், வாறுகால் கட்டியதாக தெரிகிறது. வாறுகால் பாலம் கட்டிய 5 மாதத்திற்குள் சிதிலமடைந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. பள்ளிக்கூடம் திறந்தால் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரின் காலை பதம்பார்க்கும் வகையில் கம்பிகளும், கற்களும் தெரிகின்றன. இதனால் மாணவ, மாணவியர் கால்கள் வாறுகாலில் சிக்கி காயம் ஏற்படவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, வாறுகால் மற்றும் வாறுகால் பாலம் கட்டிய ஒப்பந்தாரரின் பணியை மறுஆய்வு செய்து, தரமாக கட்ட உரிய உத்தரவினை பிறப்பிக்க வேண்டும் என பெற்றோர் தெரிவிக்கின்றனர்….

The post ரோசல்பட்டியில் ஊராட்சியில் அதிமுக ஆட்சியில் அவசரகதியில் அமைத்த வாறுகால் பாலம்  சேதம் appeared first on Dinakaran.

Tags : Rosalpatti ,Virudunagar ,Devar ,Pandiyanagar-Muthal Nagar ,Vrudunagar Rosalbati ,Dinakaran ,
× RELATED விருதுநகர் குவாரி விபத்தில்...