×

ஆட்டோ டிரைவர்கள் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை: வட்டார போக்குவரத்து ஆய்வாளர் எச்சரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலைய வளாகத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுடன் கூடுதல் ஆட்டோக்களை இயக்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஏற்கனவே ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் 100 க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இந்த ஸ்டாண்டில் கூடுதலாக 80 ஆட்டோக்கள் ரயில்வே நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்கனவே உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் ஆட்டோ ஓட்டுநர்களுடன் ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்வே போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் இங்கு கூடுதலாக ஆட்டோக்களை அனுமதிக்க முடியாது என கூறினர். இதுகுறித்து வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கே.பன்னீர்செல்வம் கூறும்போது ரயில்வே நிர்வாகம் அறிவித்து ஆணை பிறப்பித்துள்ளதை மாற்ற முடியாது. ஆனால் இது தவிர கூடுதலாக இங்கு ஆட்டோக்களுக்கு அனுமதிக்கக்கூடாது என நாங்கள் கடிதம் கொடுத்து இனி வரும் காலத்தில் கூடுதல் ஆட்டோக்களை இங்கு அனுமதிக்காமல் பார்த்துக் கொள்கிறோம். தற்போது முன்னுரிமை அடிப்படையில் பழைய நபர்கள் ஆட்டோக்களை இயக்கலாம். புதிதாக வந்தவர்கள் ஏற்கனவே உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் ஆலோசனையின் பேரில் ஆட்டோக்களை இயக்கிக் கொள்ளலாம் என்றார். இதற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். மேலும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. முக்கியமாக ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டரை பயன்படுத்தி அதன்படி கட்டணம் வசூல் செய்வதில்லை.  மீட்டரை பயன்படுத்தாமல் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வருகின்றன. இனிமேல் மீட்டர் கூறிய கட்டணம் மட்டுமே பயணிகளிடம் வசூலிக்க வேண்டும். மேலும் ஆட்டோ ஓட்டுனர்கள் சாலை விதிகள் மற்றும் போக்குவரத்து விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். 3 பயணிகளுக்கு மேல் ஆட்டோக்களில் ஏற்றிச் செல்லக்கூடாது. ரயில் நிலைய வளாகத்தில் போக்குவரத்திற்கும் ரயில் பயணிகளுக்கும் இடையூறு இல்லாமல் ஆட்டோக்களை வரிசையாக நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும். மேலும் இங்கு பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் வரும் பயணிகள் தெரியும் அளவிற்கு ஆட்டோவை நிறுத்தி பயணிகளை ஏற்ற வேண்டும். அப்போதுதான் குற்றவாளிகள் மற்றும் பிரச்சினைக்குரிய நபர்கள் குறித்து ஆய்வு செய்ய ஏதுவாக இருக்கும். இந்த விதிமுறைகளை ஆட்டோ ஓட்டுனர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் மீறினால் அவர்களது ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் கே.பன்னீர்செல்வம் எச்சரித்தார். இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் ரயில் நிலைய காவல் ஆய்வாளர் செபஸ்டின், ரயில்வே துணை காவல் ஆய்வாளர் கிரி ஆகியோர் கலந்து கொண்டனர்….

The post ஆட்டோ டிரைவர்கள் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை: வட்டார போக்குவரத்து ஆய்வாளர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Thiruvallur ,Oriental ,Dinakaran ,
× RELATED அரசு தொழிற்பயிற்சி மையங்களில் 100% மாணவர் சேர்க்கை : கலெக்டர் அறிவுறுத்தல்