×

வாகனம் மோதி மான் பலி

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே வாகனம் மோதி மான் இறந்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாச்சி வனப்பகுதியில் கோமாளிபட்டி பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சுமார் ஒன்றரை வயதுடைய கடமான் இறந்தது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விருப்பாச்சி கால்நடை மருத்துவர் சரவணபவா தலைமையில் மானை மீட்டு பரிசோதித்தனர். இதைத் தொடர்ந்து மான் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது. விபத்தில் மான் பலியானது குறித்து விசாரணை நடந்து வருகிறது.  …

The post வாகனம் மோதி மான் பலி appeared first on Dinakaran.

Tags : Otanchatram ,Dindigul District, Komalipatti ,Ottanchatram ,Vidhachi Forest ,Dinakaran ,
× RELATED ஒட்டன்சத்திரம் சந்தையில் காய்கறி விலை வீழ்ச்சி