×

கீரனூர் அடுத்த நார்த்தாமலையில் போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நேற்று கீரனூர் அருகே உள்ள பசுமலைபட்டியில் தொடங்கியது.புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டுதோறும் காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறுவது வழக்கம் இந்தாண்டு பயிற்சி நேற்று துவங்கி 30ம்தேதி வரை நடைபெறுகிறது. கீரனூர் பக்கமுள்ள நார்த்தாமலை பசுமலைப்பட்டியில் மலை குன்றுகளுக்கு இடையே உள்ள பயிற்சி மையத்தில் இப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. பயிற்சியை மாவட்ட எஸ்பி நிஷாபார்த்திப்பன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.இதில் டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள் என தினசரி 150 பேர் வீதம் சுமார் 1,200 பேர் பயிற்சி பெற உள்ளனர். சிறப்பு பயிற்சி பெற்றவர்கள் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். குறிப்பிட்ட எல்லைக்குள் அட்டை தடுப்புகள் வைக்கப்பட்டு இப்பயிற்சி நடத்தப்பட்டது.அனைவரும் கட்டாயம் கலந்துகொண்டு பயிற்சி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது….

The post கீரனூர் அடுத்த நார்த்தாமலையில் போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Kiranur ,Northamalai ,Pudukottai ,Pasumalaipatti ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி இளைஞர் பலி..!!