×

ஈரோட்டில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்ற லாரியில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான துணி எரிந்து சாம்பலானது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே துணி லோடு ஏற்றி சென்ற லாரி சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது. விக்கிரவாண்டி அடுத்து தனியார் கல்லூரி உள்ளது. அந்த தனியார் கல்லூரி அருகே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.திருப்பூரில் இருந்து ஜவுளி ஏற்றி சென்ற லாரி கொல்கத்தா நோக்கி சென்றது. விக்கிரவாண்டி அருகே சென்ற போது லாரியின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. சாலையில் உரசிக்கொண்டு இடதுபுறமாக இழுத்து செல்லப்பட்டு முதலில் லாரியின் டீசல் டேங்க் பகுதியில் தீ பற்றியுள்ளது. பின்னர் தீ லாரியின் மற்ற பகுதிகளுக்கு பரவியுள்ளது. லாரியை ஒட்டி வந்த சுரேஷ் என்பவரும், மற்றொரு ஓட்டுநரான நட்ராஜ் ஆகிய இருவரும் விபத்து ஏற்பட்டதும் லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பியுள்ளனர்.லாரியில் சுமார் ரூ.35 லட்சம் மதிப்பிலான திருப்பூரில் தயாரிக்கப்பட்ட புது துணிகள் கொல்கத்தாவிற்கு ஏற்றுமதி செய்வதற்காக லாரியில் ஏற்றி சென்றுள்ளனர். லாரியில் இருந்த அனைத்து துணிகளுக்கும் தீ விரைவாக பரவியுள்ளது. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிக அளவில் செல்லும் நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் தகவலறிந்து வந்த விழுப்புரம் தீயணைப்பு படையினர் தீயை அனைத்து வருகின்றனர்….

The post ஈரோட்டில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்ற லாரியில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான துணி எரிந்து சாம்பலானது appeared first on Dinakaran.

Tags : Erot ,Kolkata ,Viluppuram ,Vikrawandi ,Viluppuram district ,Chennai ,Trichy National Highway ,Erote ,
× RELATED மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பல...