×

மின்சாரம் பாய்ந்து கேபிள் ஆபரேட்டர் பலி

பூந்தமல்லி: சென்னை குன்றத்தூரை அடுத்த கோவூர், தண்டலம், எம்ஜிஆர் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (35), தனியார் நிறுவன கேபிள் ஆபரேட்டர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வானகரம், செட்டியார் அகரம் அருகே பள்ளம் தோண்டி கேபிளை பழுது பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது மேலே சென்று கொண்டிருந்த வயரில் இணைப்பு கொடுக்கும்போது எதிர்பாராதவிதமாக மின்சார வயரில் கைபட்டது. இதில் மின்சாரம் உடலில் பாய்ந்து தூக்கிவீசப்பட்டார். பலத்த காயமடைந்த ராஜேஸ்குமாரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ராஜேஷ்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்….

The post மின்சாரம் பாய்ந்து கேபிள் ஆபரேட்டர் பலி appeared first on Dinakaran.

Tags : Poonthamalli ,Rajeshkumar ,MGR Street ,Govur ,Dandalam ,Chennai Kundathur ,
× RELATED ராட்சத பைப் லைன் அமைக்கும் பணி தீவிரம்