×

மகள்களை படிக்க வைப்பதற்காக பனைமரம் ஏறும் பார்வையற்ற தந்தை: நூறு நாள் திட்டத்தில் வேலையும் செய்கிறார்

ராமநாதபுரம்: உச்சிப்புளி அருகே, மகள்களைப் படிக்க வைப்பதற்காக, பார்வையற்ற தந்தை பனைமரம் ஏறும் தொழில் செய்து வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே கடலோர கிராமம் வெள்ளரி ஓடை. இக்கிராமத்தைச் சுற்றி பனைமரக் காடுகள் சூழ்ந்திருக்க, ஒதுக்குப்புறமாக தனி வீட்டில் மனைவி கலாதேவி, இரண்டு மகள்களுடன் வசித்து வருபவர் முருகாண்டி (59). இவரது மூத்த மகள் சிம்ரா ஷாலினி. எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்து முடித்து, சென்னையில் பயிற்சியில் உள்ளார். இளையமகள் லாவண்யா பி.எஸ்சி நர்சிங் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். பிறவியில் பார்வைற்றவர் முருகாண்டி. எனினும் யாருடைய உதவியுமின்றி தனி ஆளாக பனை மரம் ஏறும் தொழில் செய்கிறார். ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் பனைமரங்கள் வெட்டப்பட்டதால் பனைத்தொழில் அழிவின் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் முருகாண்டி பனைமரம் ஏறுவதோடு, நூறு நாள் வேலைக்கும் சென்று வருகிறார். முருகாண்டி கூறுகையில், ‘‘எனக்கு பிறவியிலேயே பார்வை கிடையாது. எங்க ஊரைச் சுத்தி பனங்காடுகளா இருந்ததால, சின்ன வயசுலேயே எனக்கு பனை மரம் ஏற, நுங்கு சீவ, பாய் பின்ன, ஓலை கிழிக்க, வேலி அடைக்க எங்க அம்மா பழக்கினாங்க. பார்வையில்லாம நான் தான் படிக்காம போயிட்டேன். ஆனா, பிள்ளைகள படிக்க வெச்சு பெரிய ஆளாக்கிடணும்னு வைராக்கியத்துல படிக்க வெக்கிறேன். அப்பல்லாம் பனை மரம் நிறைய இருந்துச்சு. நல்லா வருமானம் கிடைச்சது. இப்ப பனை மரம் இல்லை. வருமானம் இல்லை. அதனால அரசு நூறு நாள் வேலைக்கும் போயிட்டு இருக்கேன். இதுல கிடைக்குற வருமானம் போதுமானதா இல்ல. எனது இரு மகள்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்’’ என்றார்….

The post மகள்களை படிக்க வைப்பதற்காக பனைமரம் ஏறும் பார்வையற்ற தந்தை: நூறு நாள் திட்டத்தில் வேலையும் செய்கிறார் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Uchipulli ,Ramanathapuram district ,
× RELATED கலெக்டர் ஆவது லட்சியம்; ராமநாதபுரம்...