×

கம்பம்மெட்டில் பறவை காய்ச்சல் தடுப்பு முகாம்-வாகனங்களுக்கு மருந்து தெளித்து அனுப்புகின்றனர்

கம்பம் : கேரளாவில் பறவைக்காய்ச்சல் எதிரொலியாக தேனி மாவட்ட எல்லையான கம்பம்மெட்டு பகுதியில் கால்நடைத்துறை சார்பில் பறவைக் காய்ச்சல் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பறவை கய்ச்சல் பரவி வருகிறது. இதன் எதிரொலியாக கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு கால்நடை, பறவைகளை கொண்டு வரும் சரக்கு வாகனங்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், கம்பம்மெட்டு பகுதியில் கம்பம் கால்நடை மருத்துவர் ராஜாமோகன்  பரமசிவம் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், உதவியாளர்கள் வாகனங்களை சோதனை  செய்து வருகின்றனர். கால்நடைகளை ஏற்றி, இறக்கிவிட்டு திரும்பும் வாகனங்களை முழுவதுமாக ஸ்பிரேயர் மூலம் மருந்து தெளித்து அனுப்பப்படுகிறது. அதேபோல் தமிழகத்தில் இருந்து கம்பம் மெட்டு மலைச்சலை வழியாக பிராய்லர் கோழி, முட்டை மற்றும் கால்நடைகள் கொண்டு செல்லும் வாகனங்களை பரிசோதித்து மருந்து தெளித்து அனுப்பி வருகின்றனர். இதுபற்றி கால்நடை மருத்துவர் ராஜா மோகன் பரமசிவம் கூறுகையில், ‘தமிழகத்தில் பறவை காய்ச்சல் இல்லை. இங்கிருந்து பிராய்லர் கோழி, முட்டைகள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் கால்நடை வாகனங்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.காலியாக வரும் வாகனங்களில் ஸ்பிரேயர் மூலம் வைரஸ் தொற்று பரவுதல் தடுக்க மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது’ என்றார்….

The post கம்பம்மெட்டில் பறவை காய்ச்சல் தடுப்பு முகாம்-வாகனங்களுக்கு மருந்து தெளித்து அனுப்புகின்றனர் appeared first on Dinakaran.

Tags : Kampammet ,Kampam ,Kerala ,Kampammettu ,Theni district ,
× RELATED கம்பம் புறவழிச் சாலைகளில் பழுதான...